மட்டு BBC கல்வி நிலையத்தில் இடம் பெற்ற கோலாகளமான வானி விழா..




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ந்து சமய கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாப்படும் வானி விழாவினை இம் முறையும் மட்டு நகரில் மட்டுமல்லாது முழு கிழக்கிலங்கையிலுமே தனியார் கல்வி துறையில் புகழ் பெற்று காணப்படும் மட்டு BBC கல்வி நிலையம் மிகவும் கோலாகளமாக கடந்த 29.09.2017 வெள்ளிக்கிழமை நடாத்தி முடித்தது.

மத அனுஸ்டானங்களுடனும், முக்கிய பூசையுடனும் ஆரம்பமான குறித்த மட்டு BBC கல்வி நிலையத்தின் வானி விழாவிற்கு பிரதம பேச்சாளராக இலங்கை திறந்த பல்கலை கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கனபதிபிள்ளை ஞானரத்தினம் கலந்து கொண்டதோடு BBC கல்வி நிலையத்தின் உரிமையளரும், பிரபல கிழக்கு பிராந்திய வனிக கல்வி ஆசிரியருமான கே.கே.அரஸ், அளவியல் ஆசிரியர் பி.நிரூபன் ஆகியோர்கள் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் முக்கிய நிகழ்வுகளாக மாணவ மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பிரதம விருந்தினரும், விரிவுரையாளருமான கனபதிபிள்ளை ஞானரத்தினத்தினால் முக்கிய சொற்பொழிவாற்றலின் சுருக்கமும், குறித்த கோலாகளமான BBC கல்வி நிலையத்தின் வானி விழாவின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய காணொளியும் எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -