மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நுவரெலியா மாவட்ட வலப்பனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ராகல தோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் நேற்று கையளிக்கப்பட்டது.
கடந்த 5 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் கைவிடப்பட்ட இத்திட்டத்தை அமைச்சர் தனது நிதியொதுக்கீட்டில் தனிவீடுகளாக மாற்றியமைத்து மேலும் காணி உரித்துக்களை வரும் 29 ஆம் திகதி கையளிக்கவுள்ளார். அத்துடன் அதிமேதக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைவாக சிறுவர்களுக்கான போஷக்கு உணவும் வீட்டுத் தோட்டத்துக்கான மரக்கண்று நாட்டலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.