கிழக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி அம்பாறையில்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இம்முறை அம்பாறையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது விடயமாக ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை 08.09.2017 இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த விளக்கங்களைத் தந்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

'மலரும் கிழக்கு' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது,

இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இதுபோன்ற கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைந்து கொள்வதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளது.

மாகாண உற்பத்திப் பொருட்களுக்கு மாகாண மட்டம், தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பது இந்த கண்காட்சியின் நோக்காகும்

இதனூடாக கிழக்கு மாகாணத்தின் பிரதான உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தைப் பெறுமதியொன்றை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் இதனை ஒழுங்கு செய்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக விளக்கமளிப்பு நிகழ்வில் கிராமிய கைத்தொழில்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -