மூதூரிலிருந்து -கிண்ணியா பிரதேசத்திற்கு வரும் போது இறால் குழி பாலத்திற்கருகில்
120 மில்லி கிரேம் ஹொரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவரை நேற்றிரவு (21) 8.30மணியளவில் கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர்-அப்துல் காசீம் வீதியைச்சேர்ந்த ஹபீ அப்துல்லாஹ் அறபாத் (34வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இச்சந்தேக நபரை சோதனையிட்ட வேளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் இன்றைய தினம் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
