ஏறாவூர் எஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்எம் ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம.; ஹிஸ்புல்லா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்எஸ். சுபைர் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ். இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மாணவர்களது கலைநிகழ்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன்;; பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது நிலவும் வளப்பற்றாக்குறையினை முழுமையாக நிவர்த்தி செய்ய தேவையான நிதி அடுத்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்படுமென இங்கு உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.