இதில் எங்குமே கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சரினால் காட்டப்பட்ட, மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களால் அவரது முகநூலில் பதிவிடப்பட்ட - சட்டமா அதிபரினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஆவணம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அப்படி எந்த திருத்த முன்மொழிவுகள் பற்றியும் உயர் நீதிமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? எல்லோருமாக சேர்ந்து நம்மை ஏமாற்ற முயற்சித்துள்ளார்களா?
ஆங்கிலம் தெரியாது என்று சொல்லப்பட்டவர்கள் ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அது அறிவல்ல என்றும் ஆங்கிலம்; தெரிந்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல என்றும் நிருபித்துள்ளார்கள்.
மாகாண சபையொன்றின் பதவிக்காலத்தை நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என்ற நீதிமன்ற தீர்மானம் மக்களின் இறைமைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.
கடந்த 13-09-2017ம் திகதிய ஊடகவியலாளர் மாநாட்டிலும் அதன் பின்னர் தினக்குரல் பத்திரிகையிலும் இணையத்தளங்களிலும் என்னால் சொல்லப்பட்டுள்ள விடயங்களை உயர் நீதிமன்றத்தின் தீர்மமானம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லா.
சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்
தேசிய கொளள்கை பரப்புச்செயலாளர்
தேசிய காங்கிரஸ்.
2017-09-20
உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இதோ அதன் முழுவடிவில்
இதனைக் கிளிக் செய்து பார்வையிடலாம்...
