திண்மக்கழிவு அகற்றல் சம்மந்தமாக அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இசட்.எம்.ஸாஜித் மற்றும் இளைஞர் அமைப்புகள் கல்முனை மாநகரசபை ஆணையாரரிடம் மகஜர் ஒன்றை20.09.2017 ஆம் திகதி கையளித்தது.
அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற திண்மக்கழிவுகளை அகற்றல் தொடர்பாக அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை இளைஞர் கூட்டமைப்பு (Youth Alliance Sri Lanka) அமைப்பின் தலைவருமான இசட்.எம். ஸாஜித் மற்றும் Youth Unity Power (YUP) அமைப்பின் தலைவர் எம்.எம்.எம். றிப்னாஸ் பிரதி அமைப்பாளர் இபாக் அஹமட் ஆகியோர் கல்முனை மாநகர ஆணையாளர் லியாகத் அலியை நேரடியாக சந்தித்து கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் சம்மந்தமாக கலந்தலோசிக்கப்பட்டு குறித்த அமைப்பினால்
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்றிட்டமொன்று ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தினூகடாகவும் கல்முனை மாநகர சபையின் எதிர்கால செயற்றிட்டங்கள் ஊடாகவும் இந்த பாரிய பிரச்சினையான திண்மக்கழிவுகளை அகற்றல் சம்பந்தமாக விரைவாக செயற்பாடுகளை மேற்கொள்வதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குறித்த அமைப்புகளுக்கு கல்முனை மாநகர ஆணையாளர் லியாகத் அலி வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
