இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது மேற்படி காப்பகமானது கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கிவருகின்றது மேலும் இக்காப்பகத்தில் ஆண் பெண் பிள்ளைகளென 22பேர் வரையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் அத்துடன் அவர்கட்குறிய கல்வி வளங்களும் சிறப்பாக அமைத்துக்கொடுக்கப்பட்டும் உள்ளது
இதேவேளை கடந்த 12.09.2017 அன்று திடீரென அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட திருகோணமலை சிறுவர் நன்னடத்தை அதிகார சபையினர் அக்காப்பகத்திலிருந்த 5 தொடக்கம் 16 வயது வரையிலான எட்டு சிறார்களை பலவந்தமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்
குறித்த சிறுவர்களில் ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தையாக அக்காப்பகத்திலிருந்து வளர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேவேளை குறித்த காப்கத்தின் நிர்வாகிகள் ஏன் இங்கிருந்து குறித்த சிறார்களை அழைத்து செல்கிறீர்கள் என வினாவிய போது குறித்த காப்பகம் கிறிஸ்தவ காப்பகம் என சுட்டிக்காட்டியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினாலேயே இக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் இது ஓர் தனிப்பட்ட பலிவாங்கள் காரணமாக அரச அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகார துஷ்பிரயோகப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என காப்பக நிர்வாகம் குற்றம் சுமத்துகிறது என்றும் அதற்குறிய சகல ஆவணங்களும் தம்மிடம் உள்ளது என்றும் மேலும் இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவரே முற்றிலும் காரணம் என சந்தேகிப்பதாகவும் காப்பக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்
இக்காப்கத்திற்கும் இந்த சிறார்களுக்கும் யார் கருசனை காட்ட போகிறார்கள் என்பது கேள்விக்குறியே..?
