வருடம் விடை பெறுகிறது...

Mohamed Nizous-

முஸ்லிம் வருடமொன்று
முடிந்து போகின்றது
வேறோர் வருடம் இங்கு
விடிந்து வருகின்றது

எத்தனை நிகழ்வுகள்
இழந்து போன வருடத்துள்
சிந்தனை செய்து பார்த்தல்
சிறந்தது வருட முடிவில்

முட்டாள் தனம் கொண்டு
கட்டார் நாடு மீது
இட்டார் பல தடைகள்
இருந்தும் தோற்றுப் போனார்

கேடிகளின் மியன்மார் அரசால்
ஓடினார் முஸ்லிம் நசிந்து
மோடியும் கூடச் சேர்ந்து
ஆடினார் அகதியாய் ஆக்க

உத்தர பிரதேசம் என்ற
உண்ணாட்டு ஆட்சிப் பிரிவில்
புத்தி போதா ஒருத்தன்
புதிதாய் ஆட்சிக்கு வந்தான்

தொப்பிகளின் கடையில் மட்டும்
தொடர்ந்து கரண்ட் சோர்ட்டாகி
அப்படியே எரிந்து போயிற்று
ஆனாலும் இப்போ இல்லை

ஆட்சியில் அமர்ந்திருந்து
பூச்சாண்டி காட்டிய தாஸ
பூச்சியமாய் ஆக்கப் பட்டார்
மூச்சு விட்டார் முஸ்லிம் நிம்மதியாய்

அங்கப் பாரு முஸ்லிம் பெண்கள்
ஆள்கிறார் என்று காட்ட
சிங்கப்பூரு முஸ்லிம் லேடி
செல்வாக்குப் பெற்று வந்தார்

மாறா வலி தந்தவர்க்கு
சூறாவளி வந்து வீசி
சூறையாடிச் சென்றதனால்
சூரன் சுருண்டு போனார்

யாரு என்று தெரியா வண்ணம்
எந்தவொரு செய்தி அனுப்ப
சாரஹா தந்த அரபி
சர்வதேச புகழ் பெற்றார்

உறவில் புதிதாய் மலர்கள்
உதித்து மகிழ்ச்சி நீட்ட
மறைந்து போனார் பலர்கள்
மனதில் வலியைத் தந்து

வருடம் கடத்தல் என்பது
வாழ்க்கையை முடிக்கும் மைல் கல்
வருகின்ற வருடம் வாழ்வில்
வசந்தம் வீச வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -