தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை காத்தான்குடி சுகாதார வைத்திய பிரிவில் உள்ள வீடுகள் பொது இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் களம் இறங்கவுள்ளனர்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை டெங்கு நுளம்பு உற்பத்தி ஆகாத வகையில் சுத்தமாக வைத்திருப்பதுடன் பரிசோதனைக்காக வரும் அதிகாரிகளுக்கு கடமையை சரிவரச்செய்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் U.L.M.நஸ்ரூத்தீன் கேட்டுக்கொண்டார்.