20 தோற்று விட்டது. தேர்தலை ஒத்தி போட அரசு காய் நகர்த்தல்

ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன்-

நாம் ஏற்கனவே சொன்னது போன்று நீதி மன்ற தீர்ப்பு வந்து விட்டது . 20 ஆவது திருத்த மசோதாவில் அரசு தோற்று விட்டது . 20 ஆவது திருத்த மசோதா என்பது நாடாளுமன்றத்தில் 3 ல் 2 பெரும்பான்மை பலம் காண்பிக்க வேண்டும் அத்துடன் சர்வஜன வாக்கடுப்பு நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கபட்டுள்ளது .அந்த தீர்ப்பின் நகல் இன்று சபாநாயகர் உத்தியோக பூர்வமாக நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்து விட்டார்

அதனால் கிழக்கு சப்ரகமுவ.வடமத்தி ஆகிய 3 மாகாண சபைகளையும் இம்மாத இறுதியில் கலைக்க வேண்டும் .இது சட்டம்.

ஆனால் 3 சபைகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்தாமல் 2 வருடத்தை கடத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளது .இது குறித்து அதிபர் மைத்திரி பிரதமர் ரணிலுடன் அமெரிக்கா போகும் முன்னர் பேசிவிட்டு சென்றுள்ளார் .

இதேவேளை இது குறித்து எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் ரிடமும் அதிபர் மைத்திரி பேசியுள்ளார்..அரசு எந்தவொரு தேர்தல் வைத்தாலும் தோல்வி கண்டு விடும் என்று இலங்கை அரசின் தேசிய புலனாய்வு துறை நாடு முழுவதும் மாவட்ட ரீதியாக விசேடமாக திரட்டிய அறிக்கையை அதிபர் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருக்கு கொடுத்துள்ளது. அதனால் அரசு தேர்தல் நடத்தும் நோக்கமில்லை .

அரசு தேர்தல் நடத்த வேண்டுமானால் ஒன்று மஹிந்த சகோதரர்களுக்கும் மகிந்த புதல்வர்களுக்கும் ஊழல் தண்டனை கொடுத்து அவர்களின் குடியுரிமையை .பறிக்க வேண்டும் இது மிகவும் சுலபமாக செய்யக்கூடியது . அல்லது மஹிந்த அணியுடன் அதிபர் மைத்திரி அணி இணைய வேண்டும். இது கொஞ்சம் கடினமானது.

அதிபர் மைத்திரி மகிந்தவுடன் இணைவது பிரச்சினை இல்லை ஆனால் மகிந்தர் கேட்கும் பிரதமர் பதவி மைத்திரியால் கொடுக்க முடியாது,மகிந்தர் பிரதமர் பதவி பெற்றால் முதல் வேலை மைத்திரி குடும்பத்தை பழி தீர்க்கும் பணியாகத்தான் இருக்கும்.அதனால் மகிந்தருக்கு பிரதமர் பதவி கொடுக்க முடியாது.அத்துடன் மகிந்தர் மைத்திரி இணைவதை ஒரு போதும் ரணில் விரும்பவில்லை.

அதனால்தான் மைத்திரியின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற ஒரு பதவியை ரணில் உருவாக்கி அந்த பதவியில் ரணிலின் நெருங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ரணிலின் முன்னாள் பாதுகாப்பு ஒருவர் மைத்திரியின் அசைவுகளை மோப்பம் பிடித்து வருகின்றார் .தேவைப்படும் போது ரணிலிடம் போட்டுக் கொடுப்பார்.

தேர்தல் பிந்தப் போடல்


அதனால் இந்த 3 மாகாண சபைகளை கலைத்து விட்டு சபைகளின் தேர்தலை 2 வருடத்திற்கு பிந்தப் போட்டுக் கடத்தும் நிலைப்பாடு அரசுக்கு உள்ளது.அந்த வகையில்தான் அதிபர் மைத்திரி அமேரிக்கா போகும்முன்னர் சகல மாகாண மற்றும் ஏனைய தேர்தல்கள் புதிய முறையில்தான் நடத்தப்படும் என்று ஒரு கருத்தை சொல்லி விட்டு அமேரிக்கா சென்றுள்ளார்.

இதே கருத்தை பிரதமர் ரணிலும் கடந்த வாரம் சொல்லியுள்ளார் .ஆக இந்த 3 மாகாண தேர்தல்களையும் நடத்தும் நோக்கம் அரசுக்கு அடியோடு இல்லை .

3 மாகாண தேர்தல்களையும் 2 வருடத்திக்கு ஒத்தி போட வேண்டுமானாலும் அரசு ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டு நிறை வேற்ற வேண்டும்.அப்போது ஹக்கீம் காங்கிரஸ் ரிசாத் அணி எதிர்த்தால் அந்தப் பிரேரணை தோல்வி கண்டு விடும் அதனால் இந்தப் பிரேரணையை ஜெயிக்க வேண்டுமானால் சில வேளை பணப் பட்டுவாடா நடக்கலாம். பணம் கொடுத்தால் முஸ்லிம் அணியை வாங்கி விடலாம் .ஆனால் இங்கு தமிழ் கூட்டமைப்பு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதில்தான் 3 சபைகளின் நிலைப்பாடும் தெரிய வரும் .

தமிழ் கூட்டமைப்பின் நிலை என்ன 

3 சபைகளின் தேர்தல்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கான ஆதரவு கொடுத்தால் மஹிந்த அணி பலம் பெற்று ஜெயித்து விடும் தமிழ் கூட்டமைப்பு அதிபர் மைத்திரி மேல் அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளது.அதிபர் மைத்திரி மூலமாக மிகக்குறைந்த அளவு தீர்வொன்று சரி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தர் விரும்புகின்றார்.

இதேவேளை தமிழ் கூட்டமைப்பு கிழக்கு தேர்தலுக்கு தயார் என்று சுமந்திரன் எம்பி சொல்லுகின்றார். அது தமிழ் மக்களை நம்பிக்கையூட்டும் செய்தி எனவே இந்த தேர்தல் மூலமாக மஹிந்த பலம் பெறுவது மட்டுமன்றி இப்போது இந்த அட்சியில் முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வடக்கில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமை மற்றும் போர்க்குற்றம் போன்ற தகவல்களை உடைத்து வருகின்றார் .அவரிடம் போர்க்குற்றம் பற்றிய ஆதாரங்கள் உள்ளதாம் .இந்த தருணத்தில் ஆழியை உடைத்த கதையாக ஒரு போதும் கூட்டமைப்பு நடந்து கொள்ளாது .

சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஒரு கருவியாக பயன்படுத்தும் இந்த அரிய வாய்ப்பில் நல்ல தருணத்தில் இந்த அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டு மஹிந்த ஜெயிப்பதை தமிழ் கூட்டமைப்பு விரும்புமா ? எனவே அரசு விரும்பும் 2 வருட பிந்தப் போடுவதை தமிழ் கூட்டமைப்பு முழு மனதுடன் விரும்பும்.

இங்கு மக்களாகிய நாம் கிழக்கு தேர்தல் குறித்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கிழக்கு தேர்தலில் ஹக்கீமுக்கு என்ன நன்மை உண்டு ? தமிழ் கூட்டமைப்புக்கு என்ன நமை உண்டு அரசுக்கு என்ன நன்மை உண்டு என்றுதான் பார்க்க வேண்டும் .

அரசுக்கான நலன் என்று பார்த்தல் அரசு முற்றாக கிழக்கு தவிர்ந்து வட மத்தி சப்ரகமுவ ஆகிய 2 சபைகளையும் மகிந்தவிடம் இழந்து விடும் அதனால் இப்போது தேர்தல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டது.

ஹக்கீம் அணியின் நிலை என்ன?
ஹக்கீமுக்கான நன்மை நலன் என்னவென்று பார்த்தல் கிழக்கில் அமைச்சர் ரிசாத்திடம் குறைந்தது 3-4 உறுப்பினர்களை ஹக்கீம் அணி இழந்து விடும் .அத்துடன் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா குறைந்தது 1 ஆசனமாவது பெறலாம் . மற்றும் ஹசன் அலி பசீர் சேகு தாவூத் கூட்டணி என்று எதிராளிகள் பலம் அதிகமாகவுள்ளது ஹசன் அலி பசீர் சேகு தாவூத் கூட்டணி எங்கும் ஒரு ஆசனமும் பெறமாட்டாது என்பது வேறு கதை ஆனால் .இந்தக் கூட்டு அமைச்சர் ரிசாதுக்கு சும்மா ஒரு ஆதரவை வழங்கி மேடைகளில் சும்மா கூவலாம்.

2 வருடத்தை கடத்துகின்ற போது எதிராளிகள் ஓய்ந்து விடுவார்கள் மற்றும் களைத்து விடுவார்கள். சிலர் ஒதுங்கி நிற்ப்பார்கள் அதனால் இந்த நெருக்கடியான நேரத்தில் ஹக்கீம் அணியும் தேர்தலை தவிர்க்க மிக அதிக வாய்ப்புள்ளது .அதனால் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில் ஹக்கீம் மிகவும் ரகசியமாக ரணிலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டு கிழக்கு மாகாண ஹக்கீம் அணிக் கார்களை சும்மா உசுப்பு ஏற்றி விட்டு அம்புலிமாமா கதை சொல்லுவார். அவர் கதையை நம்பும் கூட்டம் இருக்கும் வரை அவர் வியாபாரம் நல்லா களை கட்டும் .ஆக கிழக்கு தேர்தலுக்கு ஹக்கீம் விரும்ப மாட்டார்.

ஆக அரசும் தேர்தலுக்கு விரும்பவில்லை ..பிந்திய தகவலின் படி 3 மாகாணங்களும் ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இது குறித்து நேற்று இரவு பிரதமர் 3 ஆளுநர்களிடம் பேசியுள்ளாராம்.குறிப்பாக கிழக்கு ஆளுனர் ரணிலின் கட்சி என்பதால் கிழக்கில் ரணிலின் கை ஓங்கி நிற்கும் ..

இதேநேரம் தேர்தலை நடத்த வேண்டி நீதி மன்றில் பல தரப்புக்களால் வழக்குகள் அரங்கேறும் ..எனவே வழக்கின் மூலமாக தேர்தல் நடக்க அதிக வாய்ப்புள்ளது ..தமிழ் தரப்பு மற்றும் ஹக்கீம் தரப்பு மற்றும் அரச தரப்பால் தேர்தல் நடத்தும் வாய்ப்புக்கள் குறைவு ..ஆனால் தேர்தலை சந்திக்க அமைச்சர் ரிசாத் தயாராகவே உள்ளாராம் ..பார்ப்போம்.
#இம்போட்மிரர்
#நிலாம்டீன்
#கட்டுரையாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -