அப்துல்சலாம் யாசீம் -
நகர சபை எல்லைக்குட்பட்ட திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திலுள்ள மணிக்கூடானது நீண்டகாலமாக பழுதடைந்து இயங்காது செயலிழந்திருக்கின்றமை குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் இருக்கும் இவ் மணிக்கூட்டுக்கோபுரத்திலுள்ள மணிக்கூட்டினை திருத்துவது குறித்து இது வரை உரிய பகுதியினர் கரினை கொள்ளாதிருப்பது குறித்து பொதுமக்கள் கவலை கொண்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் இனியாவது இதனை திருத்தியமைக்க நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.,
இவ் மணிக்கூட்டுக்கோபுரம் அமைந்துள்ள இடத்தினை சூழ மீன் சந்தை வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனேக முக்கிய இடங்கள் அமைத்திருப்பதால் இங்கு வந்து செல்லும் மக்கள் சரியான நேரத்தினை அறிந்து செயற்பட இது பிரதானமானதாக உள்ளது எனவே இவ் மணிக்கூட்டுகோபுரத்தினை மணிக்கூட்டினை திருத்தி இயங்க செய்யவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

