சம்பந்தனுக்கும் நல்லாட்சி கசக்கிறது !

அ அஹமட்-

ஜுலம்பிட்டியே மங்கள தேரரின் நூல் வெளியீட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் சந்தித்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது இரா சம்பந்தன் ஐயா அவர்கள் " பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ள நானும் நீங்களும்இணைந்து ஆட்சி செய்ய வேண்டுமென" கூறியுள்ளார்.

இந்த ஆட்சியை கொண்டுவருவதில் மிக நீண்ட திட்டங்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது. மைத்திரியை கொண்டு வருவதிலும் இவர் பிரத பங்காரியவராக குறிப்பிடாப்படுகிறது. இப்படியானவர் இவ்வாறானவார்த்தைகளை பயன்படுத்துவது சாதாரணமாக எடை போடக் கூடியதல்ல.

அது மாத்திரமல்ல. இன்று தமிழ் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ மீது யுத்த ஒழிப்பின் போது எழுந்ததப்பபிப்பிராயம் காரணமாக மிகவும் அதிருப்தியில் காணப்படுகின்றனர் ( தற்போது தமிழ் மக்கள் உண்மைகளைஅறிந்துவருகின்றனர்). இவ்வாறான நிலையில் இத்தகைய வார்த்தைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குபொருத்தமானதல்ல.இப்படியான நிலையிலும் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் இப்படி கூறுகிறார் என்றால் அவருக்குஎப்படி கைத்திருக்கும்.

இப்போது இரா சம்பந்தன் ஐயா உண்மையை உணர்ந்ததன் வெளிப்பாடே இவ்வாறான வார்த்தைப் பிரயோகமாகும். இவ்வாட்சியை நிறுவுவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிக அதிகமான பங்களிப்பை வளங்கி இருந்தனர். அவர்கள் தான்முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்கு சவாலாக அமைவார்கள் என நம்பப்பட்டது. அவர்களும் முன்னாள்ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்தால் இவ்வாட்சியை மிக இலகுவாக விரட்டி விடலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -