காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று(31) திங்கட்கிழமை 155வது நாளாக
காரைதீவில் தொடர் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்.
அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை கிழக்கு மாகாண
பொதுச்சேவை ஆணைக்குழு இன்று தினம் கோரியிருந்தது.
அதனையிட்டு பட்டதாரிகள் சங்கத்தலைவர் நசுறுதீன் கருத்துரைக்கையில்:
எமக்கான பாதை முதற்தடவையாக திறந்துவிடப்பட்டுள்ளது. நாம் இடைவிடாது தொடர்ந்து
போராடிவருகின்றமைக்காக கிடைத்த வெற்றியாக இதனைக்கருதுகின்றோம். எமது போராட்டம்
வீண்போகவில்லை என்பதை இது கட்டியம்கூறி நிற்கிறது.மகிழ்ச்சி. எனினும்
ஏனையோரையும் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டோர் தொடர்ந்து
முன்னெடுக்கவேண்டும் என்றார்.
அதேவேளை நேற்று கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வேலையற்ற பட்டதாரிகளை
மாவட்டரீதியில் ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது.
*விண்ணப்பம் கோரல்!
*கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை
ஆசிரியர் சேவை 3-1(அ) க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு
விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.*
*கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட பட்டதாரிகள் மாவட்ட ரீதியாக
போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரியராக சேர்த்துக்கொள்வதற்காக இவ்விணப்பம்
கோரப்பட்டிருப்பதாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.திசாநாயக்க
தெரிவித்தார்.*
*விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 21.08.2017 ஆகும் . விண்ணப்பப்படிவங்களை
கிழக்கு மாகாண இணையத்தளத்தில் **www.ep.gov.lk <http://www.ep.gov.lk/>
Recruitments and exam**எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியுமென
அறிவித்துள்ளார்.*
*ஏலவே கிழக்கு மாகாணத்தில் 1441 பட்டதாரிகளை ஆசிரியராகச்
சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் மிகவிரைவில் கோரப்படவிருக்கிறது என கிழக்கு
மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.*
*கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பதாரிகளுக்கு இலகுவான
பரீட்சையொன்றை நடாத்தி நியமனம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும்
கிழக்கில் 150நாட்களுக்கும் மேலாக அரசதொழில்கேட்டு தொடர்
சத்தியாக்கிரகப்போராட்டங்களை நடாத்திவந்த வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு
இச்செய்தி ஆறுதலளிக்கக்கூடும். எனவும் அவர் மேலும் கூறியிருந்தமை
குறிப்பிடத்தக்கது..*
*இதனை நம்பி மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்தவாரம் தமது போராட்டத்தினை
முடிவுக்குக்கொண்டுவந்தனர். எனினும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் எதிர்வரும்
ஆகஸ்ட். 2ஆம் திகதி வரை நீடிப்பது என்றுகூறி இன்றும் 155வது நாளில்
போராட்டத்திலுள்ளனர்.*
*இதேNளை 40வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு
கிழக்கு மாகாண ஆளுநர் பொதுச்சேவை ஆணைக்குழுவைப்பணித்துள்ளதாக கூறப்படுகின்றது.*
*இதனால் கிழக்கில் போராட்டத்திலீடுபட்டிருநத 40-45வயதுக்கிடைப்பட்ட சுமார்
70பட்டதாரிகள் இவ்வயது வரம்பினால் பாதிக்கப்படவுள்ளனர்.எனவே இவ்வயதெல்லையை
45ஆக அதிகரிக்கவேண்டுமென பரவலாக கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.*