பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்
எம்.ரீ. ஹைதர் அலி-

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள் மற்றும் வீதி இணைவுப் பகுதிகளை சீர் செய்யும் நடவடிக்கைகள்

காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கரமவாக அவரின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள் மற்றும் வீதி இணைவுப் பகுதிகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் என்பன அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காத்தான்குடி ஊர் வீதியுடன் வந்து இணையும் உள்ளக வீதிகளின் இணைவுப் பகுதிகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சீர்செய்யப்பட்டதோடு மில்லத் பாடசாலை முன்புறம் உள்ளிட்ட சில இடங்களில் வீதி வேகத்தடை அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக காத்தான்குடி பிரதேசத்தில் வீதி விபத்துக்களும் அவற்றினால் இடம்பெறும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதோடு அவற்றை கட்டுப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -