முன்னாள் அமைச்சர் மன்சூர் மறைவிற்கு அஸ்வர் அனுதாபம்

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தலைமைத்துவ பரம்பரையில் ஒரு முக்கிய இடத்தை வகித்த ஏ.ஆர். மன்சூரின் மறைவு எம்மை வெகுவாக வாட்டுகிறது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ. எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கிழக்கு மாகாணத்தின் தந்தையென நாம் வர்ணிக்கும் மர்ஹும் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பருடைய பண்ணையில் ஒருவராக அரசியல் வானில் பல வெற்றிகளைப் பெற்று மக்களுக்காக வேண்டியும் முழுநாட்டுக்காக வேண்டியும் அவர் அரும்பணியாற்றினார்.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் அதன் பிறகு முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் மன்சூரை நியமித்தார்.

இன்று கல்முனை பொலிவுற்று விளங்குவதென்றால் அதன் முக்கிய வகிபாகம் மன்சூரையே சாரும். அங்குள்ள பொலிஸ் நிலையம், நூலகம், பஸ்தரிப்பு நிலையம் போன்ற இடங்களை உருவாக்கி கல்முனை மக்களுக்கு நவீன வாழ்க்கைச் சாதனைகளை மன்சூர் உருவாக்கித் தந்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவுடைய காலத்தில் வர்த்தக, வாணிப அமைச்சராகவிருந்து அரும்பல சேவைகளை முழுநாட்டுக்கும் வழங்கினார். அவருடைய காலத்தில்தான் முதன்முதலாக அரபு நாடுகளிலிருந்து வந்த பேரீத்தம் பழங்கள் பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் முதன் முதலாக வழங்கப்பட்டன. ஆரம்பத்தில் இலங்கை வங்காளதேசம் நட்புறவு சங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முன்னின்று உழைத்தார். அதன் இணைச் செயலாளராக பணியாற்றக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கொழும்பில் ஒரு பிரபல

சட்டத்தரணியாகவும் இவர் விளங்கினார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் பல தலைவர்கள் உருவாகினார்கள். ஏ.எம்.மேஷா, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர். எம்.எம். முஸ்தபா, எம். ஏ. அப்துல் மஜீத் போன்றோர்களுடைய வரிசையில் வைத்து பாராட்டக்கூடிய ஒருவராக மன்சூர் காணப்படுகிறார். அவருடைய மாமனார் எம்.எஸ்.காரியப்பருடைய நினைவாக தபால் தலை வெளியிடுவதற்கு மன்சூர் விடுத்த வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடைய ஆதரவுடன் அதன் வெளியீட்டு விழாவை கல்முனை

சாஹிராவில் நடாத்தி வைப்பதற்குரிய பாக்கியத்தையும் நான் பெற்றவன் என்பதை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! ஆமீன்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -