பன்சலையோடு நின்று கொள்ள வேண்டிய பௌத்த பேரினவாத பிக்குகள் -நீதிபதிகளாக வரவேண்டியதில்லை




ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

டக்கு கிழக்கிலே தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற சந்தர்பங்களை நழுவ விடுவோமானால் நாம் நமக்குள் முரண்பட்டுக் கொள்கின்ற போது எங்களுக்கு நீதி சொல்ல காவியுடை தரித்த பிக்குகள் களத்தில் வந்து நீதிபதியாக தரிசனம் கொடுப்பார்கள். இது ஆபத்தானது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் ஏறாவூர் ஹிதாயத் நகர் மகளிர் 13 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் ஹிதாயத் நகரில் வெள்ளிக்கிழமை மாலை 21.07.2017 இடம்பெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில்,
தையல் இயந்திரம் கொடுத்து வாழ்வாதாரம் கொடுத்து வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்குள் பிரவேசித்ததில்லை.
இந்தப் பிரதேசத்திலே கல்வி வளர்ச்சியடையவேண்டும் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்குள் நுழைந்தேன்.

தமி;ழ் சமூகம் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றது. காரணம் நான் களுவாஞ்சிக்குடியில் தமிழ் பொதுமக்களிடம் பேசுவதும் ஓட்டமாவடி முஸ்லிம் சமூகத்திடம் பேசுவதும் எனது வீட்டில் பிள்ளைகள் மனைவியிடம் பேசுவதும் ஒன்றுதான். நான் இடத்துக்கிடம் சமூகத்துக்குச் சமூகம், ஆளுக்காள் வித்தியாசமாகப் பேசுவதில்லை.
அதனால் என்னைப் பலருக்கும் பிடிக்கும்.

மீறாவோடையில் ஏற்கெனவே நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட விடயத்தைப் பூதாகாரமாக்கி அந்தப் பிரதேசத்திலே இருக்கிறவர்கள் மட்டக்களப்பிலே இருக்கிற பௌத்த பிக்குவிடம் போய் மண்டியிட்டு நியாயம் கேட்கிற நடைமுறையை தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களாயின் அது எதிர்காலத்தில் வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அது சிறுபான்மைச் சமூகங்களுக்கு அழிவு தரும் ஆப்த்தான அணுகுமுறையாகும்.
பெரும்பான்மையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் இந்த விடயத்தில் தெளிவாக இருந்து கொண்டு தமிழ் முஸ்லிம் உறவுக்கு அத்திவாரமிடவேண்டும்.

இரண்டு சமூகமும் சேரவேண்டிய எத்தனையோ புள்ளிகள் இருக்கின்றன. அதனைப் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேரின பௌத்த மதவாதக் கும்பல்கள் அவர்கள் எப்பொழுதும் பெரும்பான்மை சமூகத்தின் இனக் காவலர்களாக சித்தரிக்கப்படுகின்றவர்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
அதனால் சிறுபான்மையினராகிய நாம் மிகக் கவனமாக காய் நகர்த்த வேண்டும். அறிவுபூர்வமாக அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து எமக்கு முன்னே எரியும் நெரிப்பாக எதிர்கொள்கின்ற இனவாதத்தை முறியடிப்பதற்கு அறிவுபூர்வமான ஆணித்தரமான வியூகம் வகுக்க வேண்டும்.

ஒற்றுமை படுவதற்குப் பதிலாக இன்னமும் தங்களுக்குள் பிரிந்து நின்று செயற்பட்டால் அதனை வாய்ப்பாக வைத்துத்தான் அவர்கள் சிறுபான்மையினரைச் சீரழிப்பதற்கான மிக சூட்சுமமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்குள் இதய சுத்தியுடன் இணங்கி வந்து இணைந்து பயணிக்காதவரை இந்த நாட்டின் சிறுபான்மையினருக்கு விமோசனம் கிட்டப்போவதில்லை.

தமிழ் முஸ்லிம் இரண்டு சிறுபான்மையும் ஒற்றுமைப்பட்டு இந்த நாட்டில் தங்களது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வியூகம் வகுக்காதவரை விடிவு இல்லை என்பதோடு அழிவையும் எதிர்கொள்வார்கள் என்பதுதான் யதார்த்தமான ஆரூடம்.

அழிவைச் சந்தித்த அனுபவம் பாடமாக இருக்குமானால் சிறுபான்மைச் சமூகங்கள் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழ வழி தேடிக் கொள்ளும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -