ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் டெங்கு அபாயம் மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பில் அதிக கவனம்


ஏறாவூர் நிருபர்)ஏஎம் றிகாஸ் -

பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம்எஸ் சுபைர் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி,சுகாதாரம்,விவசாயம், மீன்பிடி மின்சாரம்,நீர்வழங்கல் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தில் இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் 552 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 90 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. கடந்த வருடம் இக்காலப்பகுதியில் 44 பேர் மாத்திரமே டெங்கினால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி கே.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை வீதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 322 பேர் இவாண்டில் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் எம்எச்எம் தாரிக் குறிப்பிட்டார்.

இதேசமயம் ஏறாவூர் நகரில் முதலமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல கோடிக்காணக்கான ரூபா நிதியொதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் நகர சபையிடம் இல்லை எனக் குறிப்பிடப்படுவது வேடிக்கையான விடயம் என்றும் அடுத்த கூட்டத்தில் இவ்வறிக்கைகள் சமர்பிக்கப்படாது விட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தலைவர்கள் எச்சரிக்கையுடன் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -