உகந்தமலையில் பாதயாத்திரீகர்கள்: நெதர்லாந்து கிறிஸ்ரினாவும் இணைவு

காரைதீவு நிருபர் சகா-
யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கடந்தமாதம் 3ஆம் திகதி கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்த வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் 41நாட்களின்பின்னர் நேற்று வியாழக்கிழமை கிழக்கின் தென்கோடியிலுள்ள உகந்தமலை முருகனாலயத்தை சென்றடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை குழுவினர் சன்னியாசிமலையடிவாரத்திலிருந்து 41வது நாள் யாத்திரையை ஆரம்பித்து காலை 10.00 மணியளவில் உகந்தமலையை சென்றடைந்தனர். கடந்த 41தினங்கள் விடாமல் தொடர்ந்து நடந்துவந்த அவர்கள் இன்றையதினம் அங்கு ஓய்வுபெறுவார்கள். 

இவர்களுடன் பொத்துவிலில் வைத்து நெதர்லாந்தைச்சேர்ந்த கிறிஸ்ரினா எனும் வெள்ளைக்கார பெண்மணியும் இணைந்துகொண்டார்.அவருடன் மேலும் இரு சி;ங்கள சகோதரிகளும் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர். குழுவில் 125அடியார்கள் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் வேல்சாமி அங்கிருந்து தகவல்தருகையில்:

பொத்துவிலிலிருந்து வரும் வழியில் நாவலாற்றுப்பகுதியில் இராணுவத்தினர் தண்ணீர்வவுசரில் குடிநீரை வழங்கினார்கள். சன்னியா சிமலையடிவாரத்தில் தங்குகையில் பாரிய மழை பொழிந்தது. கடந்த 41நாட்களில் இங்குமட்டுமே இவ்விதம் மழைபொழிந்தது. எனினும் உடைமைகளை முன்னிருந்த சிறு ஆலயத்தில் வைத்துவிட்டு நாம் நனையவேண்டி நேரிட்டது. சுமார் இருமணிநேரம் பெய்தது.

எமது பாதயாத்திரையில் உகந்தமலை என்பது முக்கியமான இடம். அங்கு ஒரு நாள் ஓய்வெடுப்போம். நாளை காட்டுப்பாதை திறந்ததும் முதன்முதலாக நாம் காட்டுக்குள் பிரவேசிக்கவிருக்கின்றோம். 1999முதல் அமெரிக்க முருகபக்தர் பற்றிக் ஹரிகன் சுவாமி தலைமையிலான குழுவினருடன் இணைந்து நான் பாதயாத்திரையை மேற்கொண்டுவந்தேன். 2007இல் அவர் தலைமைதாங்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை எனது தலைமையில் இக்குழுவினர் ஒவ்வொருவருடமும் பாதயாத்திரையை மேற்கொண்டுவருகின்றேன். பாதயாத்திரைக்காலமென்பது அற்புதமானவை. வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3மாகாணங்களையும் 7மாவட்டங்களையும் இணைத்து 56நாட்கள் 572 கிலோமீற்றர் தூரம் பயணிப்பதென்பது அந்த முருகப்பெருமானின் அருளிலேயாகும். அனைத்திற்கும் முருகப்பெருமான்தான் காரணம். எமக்கு ஒத்துழைப்பு உதவி நல்குகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். என்றார்.

நீர்கொழும்பைச்சேர்ந்த சிங்கள முருகபக்தரான கே.பெர்ணாண்டோ கூறுகையில்:

நான் 2014முதல் இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்கின்றேன். ஒருதடவை யாழ்ப்பாணம் சென்றபோது உமையாள்புரத்தில் வேல்சாமி ஜயாவைக்காணமுடிந்தது. அப்போது எனக்கு தமிழ் தெரியாது. அவரிடம் பாதயாத்திரையில் இணைய விரும்பம் தெரிவித்தேன். அவரும் பெருமனதுடன் இணங்கினார். இது எனது 4வது பயணமாகும். இம்முறை நான் கதிர்காமத்திலிருந்து கால்நடையாக தன்னந்தனியனாக யாழ்ப்பாணம் செல்வச்சந்நதிக்குச்சென்று திரு வேல்சாமியோடு இணைந்து தற்போது வந்துகொண்டிருக்கின்றேன். இந்த பாதயாத்திரை எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று ஆன்மீகப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றேன். என்றார்.

                                           நாளை காட்டுப்பாதை திறப்பு!

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை 15ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5மணியளவில் அம்பாறை மற்றும் மொனராகலை அரசாங்க அதிபர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்படும். இம்முறை வழமைக்குமாறாக காட்டுப்பாதையால் பயணிப்போருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. உகந்தமலை முருகனாயத்திலிருந்து குமுக்கனூடாக யால வனப்பகுதியூடாக பாதயாத்திரீகள் செல்லும்போது யாரும் உணவுப்பார்சல்களையோ பிளாஸ்ரிக் தண்ணீர்ப்போத்தல்களையோ வழங்கமுடியாது. இது கட்டாயம் அமுல்படுத்தப்படும்.

கடந்தகால அனுபவங்களினடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் போத்தல்கள் உணவுக்கழிவுகள் என்பன காட்டு விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகின்றன. எனவே இவற்றை வழங்கமுடியாது. இதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பொலிசார் கண்காணிப்பார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -