தேசிய காங்கிரஸ் தம்மை வலுப்படுத்திக்கொள்ளல் வேண்டும்..!

ருகின்ற மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய காங்கிரஸ் தன்னை கட்டமைப்பு ரீதியாக புனர்ஸ்தானம் செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலங்களில் கிழக்கில் மட்டுமன்றி நாடு பூராகவும் தேசிய காங்கிரஸ் தலைமையினாலும்,முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையினாலும் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை.

இருப்பினும் கடந்த ஓரிரு வருடங்களாக ஆதரவாளர்களின் தவறான புரிதல்கள், மற்றும் சில கழுத்தறுப்புக்களினால் கட்சி பின்னடைவை கண்டிருந்தது. ஆனாலும் இன்று இந்நிலைமையினால் பிரதேச அபிவிருத்தியில் விழுந்த இடைவெளியானது மக்களை சிந்திக்கத் தூண்டியுள்ளதோடு, சிறந்ததொரு மேய்ப்பனை இழந்த மந்தைகளின் நிலையையும் உணர்த்தியுள்ளது.

வடக்கை நோக்கிய தேசிய காங்கிரஸின் பயணமும், வட மாகாணமக்களின் தேசிய காங்கிரஸின் தலைமை மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸ் எதிர்காலத்தில் உத்வேகத்துடன் பயணிக்க வேண்டிய களத்தினைக் காட்டியுள்ளது. 

மாத்திரமன்றி அம்பாரை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களிலும் இருந்து புதிய பழைய ஆதரவாளர்கள் தமது தலைமை அதாவுல்லாஹ்வினை சந்தித்து பரஸ்பரம் தமது ஆதரவை பரிமாறிக்கொள்கிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலை மையமாக வைத்து தம்மை கட்டமைப்பு ரீதியில் பலப்படுத்தும் பணியினை தேசிய காங்கிரஸ் துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் மக்களிடம் இதுவரை காலமும் உரிமையை மாத்திரம் உரத்து உரைத்து மக்களின் உளவியல் உடைத்து இன்று மக்கள் புறக்கணிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்ட மு.கா, மற்றும் ம.கா, போன்றவற்றைப் புறந்தள்ளி அபிவிருத்தி என்றால் அதா என்றெண்ணி இன்று மக்கள் உள்ளார்ந்த ரீதியாகக் காட்டியிருக்கும் பச்சைக்கொடியை வாய்ப்பாகக் கொண்டு தேசிய காங்கிரஸ் இனி வருங்காலங்களில் வெற்றிநடை போட வேண்டும்.
ஷிபான் BM,
செயளாளர்,
மருதமுனை,
மத்தியகுழு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -