கலைக்கப்படவுள்ள மாகாணசபையும் கனவுகளும்.

ற்போது நாட்டில் உள்ளூராட்சி குறிப்பாக மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வட மற்றும் கிழக்கு மாகாணசபைகள் சிறுபான்மை தலமைகளை பலநெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.கடந்த 30 வருடகால யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகள்,முஸ்லீம்களள் மீதான இனவாத அடக்குமுறை மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்குள் நிலவுகின்ற பிளவுகள் மற்றும் புதியகட்சிகள் அறிமுகம் என்பன தற்போது பதவியில் இருக்கும் பலருக்கு டெங்குகாயச்சலை உருவாக்கியுள்ளது.

29/07/1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்டிய ஒப்பந்தத்தின் மூலம் திருத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு மூலம் மாகணசபைகள் உருவானது.அதிகாரத்தை பரவலாக்கவும்,இனப்பிரச்சனைக்கு தீர்வாகவும் உருவாக்கப்பட்ட இந்த முறை பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.விடுதலைப்புலிகள் கூட இதனை நிராகரித்தது தோல்விக்கான ஆரம்பமாக இருந்தது.
இருந்தும் இந்தியாவின் வற்புறுத்தலால் 19/11/1988நடைபெற்ற வடகிழக்கு இணைந்த மாகாணசபைத் தேர்தலில் EPRLF சார்பாக வரதராஜப் பெருமாள் முதலமைச்சரானார்.ஆனால் தமிழ்மக்கள் நிராகரித்ததன் காரணமாகவும் விடுதலைப் புலிகளின் நெருக்குதலாலும் 01/03/1990 தனிநாட்டுப் பிரகடனம் செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.அன்றைய ஜனாதிபதி பிரேமதாச மாகாணத்தை கலைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

இதன்பின்னரான விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் உக்கிரம் அடைந்தது மற்றும் சிங்கள இனவாதிகளின் வடகிழக்கு பிரிப்புக்கான கோரிக்கைகளால் மற்றைய மாகாணங்களில் தேர்தல் நடந்தாலும் வடகிழக்கு தொடர்ந்து மத்திய அரசின் ஆளுகைக்குள் இருந்தது.
JVP வடகிழக்கு பிரிப்பதற்கான வழக்கில் 01/01/2007ம் ஆண்டு வெற்றிகண்டது.மற்றும் அத்தாவுள்ளாஹ் மற்றும் ஹிஸ்புள்ளா போன்றவர்களின் அழுத்தங்களால் சிங்கள ஆட்சியாளர்கள் இதனை தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.
இருந்தும் விடுதலைப்புலிகளைஇரண்டாகப் பிரித்து வெற்றிகண்ட சிங்கள அரசு கிழக்கை முழுமையாக LTTEன் நிர்வாகத்தில் இருந்து பிரிக்கும் தந்திரத்தில் இறங்கியது.இதன்பயனாக 10/03/2008ல் கிழக்கிற்கான தனியான மாகாணசபை தேர்தலை நடாத்தியது.இதன் மூலம் பிள்ளையான் முதலமைச்சரானார்.

ஆயுதப் போராட்டத்தில் இருந்து நிர்வாக அனுபவமற்ற பிள்ளையான் கிழக்கில் தனியான கட்சியை ஆரம்பித்து பலமுன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்தார்.
1-யுத்தம் முடிவடைந்த பின்னர் வெளிநாடுகளை அரசுக்கு திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்
2-வெளிநாட்டு உதவிகள் கிடைத்தமை,
3-கிழக்கில் தனியான தமிழ்கட்சியாக உருவாக்க வேண்டிய கடமை
4-மஹிந்தவுடன் இருந்த நட்பு என்பன கிழக்கில் வேகமாக பிள்ளையானை செயற்படவைத்தது.இருந்தும் பிள்ளையான் மீது அதிகமான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தது.

அடுத்து 08/0/2012ல் நடைபெற்ற தேர்தலில் மஹிந்தகூட்டு பெரும்பான்மை பெறாததால் SLMC உடன் 2 -1/2வருடகால ஒப்பந்தம் மூலமாக நஜீம் முதலமைச்சரானார்.இதன்பின்னர் கிழக்கிற்கான முஸ்லீம் முதலமைச்சர் என்ற கோஷம் தீவிரமடைந்தது.இவரது காலத்தில் பிள்ளையான் போன்று அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாத போதும் மாகாணசபை நிர்வாகம் ஓரளவு சீராக இருந்தது.

மத்தியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் SLMCஜச் சேர்ந்த ஹாபிஸ் அகமட் 2015ல் முதலமைச்சரானார்.
உண்மையில் இனநல்லிணக்கம் மற்றும் விட்டுக் கொடுப்புடன் TNAவுடன் வரலாற்று ரீதியான உடன்பாட்டை செய்தது.இந்த விடயத்தில் SLMC தலமையை பாராட்டியே ஆகவேண்டும்.
ஆரம்பத்தில் ஹாபிஷ் நசீர் வேகமாக செயற்பட்டாலும், பின்னர் கட்சிக்குள் தன்னை முதல்நிலைப்படுத்தவும், மாற்றுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களை பணம் மற்றும் சிலகாரணங்களால் தனது கட்டுப்பாட்டிற்குள் உள்வாங்கவும்,மத்திய அரசுடன் இரட்டைவேடப் போக்கும் உள்ளவராக செயற்பட்டார்.

இதன்காரணமாக கிழக்கில் குறிப்பாக முஸ்லீம்களின் காணி,இடம்பெயர்வு ,இனவாத தாக்குதல்கள் மற்றும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகளை கையாள்வதில் வெற்றிகாண முடியவில்லை.அதாவது தன்னை ஆளுமைமிக்க ஒருவராக காட்டுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொடுத்த முக்கியத்துவம் மாகாண முதலமைச்சர் என்றரீதியில் மக்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்ற முடிந்ததா என்பதற்கு அடுத்த தேர்தல் பதிலளிக்கும்.

இதேநேரம் அடுத்த தேர்தலுக்கான சமிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக TNA தனது பலத்துடன் உள்ள அதேநேரம் நிச்சயம் தனித்தே போட்டியிடும்.அத்துடன் அதிகப்படியான ஆசனங்களை கடந்த தேர்தலைவிடப் பெறலாம்.காரணம்:
1-கருணா மற்றும் பிள்ளையானின் அடாவடித்தனம் இந்தமுறை இடம்பெறமாட்டாது.
2-ஏற்கனவே முஸ்லீம் முதலமைச்சர் இருந்ததால் இம்முறை தமக்குத் தேவை என்ற மனநிலைதமிழ் மக்களிடையே அதிகரித்துள்ளது.
3-TNA சார்பில் படித்த மற்றும் அதிகமான புதியமுகங்கள் போட்டியிட உள்ளமை.
5-முஸ்லீம் தலமைகளிடம் அதிகரித்துள்ள போட்டியும் பிரிவினையும்.

அத்துடன் கிழக்கில் ACMC, SLMC மற்றும் முஸ்லீம் கூட்டணி இம்முறை கூட்டணி அமைப்பதில் அதிக நெருக்குதல்களை எதிர்நோக்கும்.ஏற்கனவே இருக்கின்ற சில முஸ்லீம் உறுப்பினர்கள் மீது மக்களின் அதிருப்தி மற்றும் மூத்த முஸ்லீம் தலமைகளில் போட்டியிட உள்ளமை அதிகமான குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தேசியக் கட்சிகளை நம்பியிருக்கும் முஸ்லீம் தலமைகள் ஆசனப்பங்கீடு மற்றும் புதியவர்களை உள்வாங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளது. முஸ்லீம் கூட்டணி,ACMC,SLMC என்பன ஒரே தேசியக் கட்சியில் கூட்டணி சேர்வது நடமுறையில் சாத்தியமற்றது. அதேநேரம் கடந்தகாலத்தைப் போல தனித்து SLMC போட்டியிடுவதும் சவால் நிறைந்தது.ஏனெனில் விகிதாசர தேர்தல் முறையில் தற்போது கிழக்கில் ACMC ,NFGG மற்றும் முஸ்லீம்கூட்டணி ஓரளவு செல்வாக்கை முஸ்லீம் வாக்காளர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கம் செலுத்தும்.இவர்கள் அமைக்கின்ற கூட்டணி SLMC தனித்துவமாக கடந்த தேர்தலில் பெற்ற ஆசனத்தைக் குறைக்கலாம்.

ஆகவே முஸ்லீம் தலமைகள் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அதிகாரத்தைப் பலப்படுத்த வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொள்வது அவசியமான அவசரமாகும்.

குறிப்பாக இந்ததேர்தலை வெறுமனே முஸ்லீம் முதலமைச்சர் என்ற இனவாதக் கண்டோட்டத்தில் முன்னெடுத்து சமூகத்தை பழிகொடுக்க துணைபோகக்கூடாது.மாறாக சமூக ஒற்றுமை,பேரம்பேசும் சக்தி,பாதுகாப்பு, இருப்பு மற்றும் அபிவிருத்திக்கான கண்ணோட்டத்தில் நோக்குவதே சிறந்தது.
சுருக்கமாக:

1-சிறுபான்மை முஸ்லீம் கட்சிகளும்,சில்லறைத் தலைவர்களும் தேசியக் கட்சிகளுடனே பதவிக்காக சரண் அடைவார்கள்.

2-கருணா மற்றும் பிள்ளையான் ஆதிக்கம் இல்லாமல் நடைபெறவுள்ள முதல்தேர்தல் என்பதால் கடந்தகாலத்தை விட TNA பலமான சக்தியாக இருக்கும்.

3-கடந்த மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் ACMC ஓரளவு கிழக்கில் பலம்பெற்றுள்ளது.கூட்டணி அமைப்பதில் செல்வாக்குச் செலுத்தும்.

4-கடந்த தேர்தலைவிட எதிர்வரும் தேர்தலில்!!ஒருபுறம்ACMC,அத்தாவுள்ளாஹ் அணி
ஹிஸ்புள்ளா,NFGG
பசீர்,ஹஸனலி, சில SLMC முக்கியஸ்தர்கள் மற்றும் UNPல் மையோன்முஸ்தபா,இம்ரான் போன்ற முஸ்லீம் தலமைகள் அறிமுகம் கூட்டணி அமைப்பதில் பல சிக்கலை எதிர்நோக்கலாம்.
இதன்காரணமாக SLMC தனித்துப் போட்டியிட நிர்ப்பந்திக்கப்படலாம்.

5}சிங்கள வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அம்பாறையில் UNPவும் திருகோணமலையில் PAவும்தனது செல்வாக்குடன் உள்ளது. இருந்தும் மஹிந்த அணியினர் கடுமையான போட்டியை சிங்கள வாக்காளர்களிடயே ஏற்படுத்தலாம்.

6-சிங்கள மக்கள் மஹிந்த,ரணில் மற்றும் மைதிரி என்று பிரிந்து செயற்பட்டால் ,முஸ்லீம்கள் ஒற்றுமையுடனும் விட்டுக் கொடுப்புடனும் தனியாக/ ஒரு அணியில் இணைந்து செயற்பட்டு ஆசனங்களை அதிகரிக்கலாம்.இதன்மூலம் TNAவிற்கு சமமான ஆசனபலத்தைப் பெறலாம்.

7-அத்துடன் கிழக்கில் அதிகமான ஆசனங்களை தனித்து TNA பெறும்.இவர்களுடன் கூட்டு மீண்டும் ஆட்சியமைப்பதில் முஸ்லீம் தரப்பும் சரிசம பங்காகலாம்.

ஆகவே முஸ்லீம்கள் வெறுமனே முதலமைச்சர் கனவுகளால் ஆசனங்களை இழப்பதைவிட தங்களது பிரதிநிதிகளை திட்டமிட்டு அதிகரிப்பதன் மூலம் பலமிக்க சக்தியாக மாறலாம்.

வெறுமனே பதவிக்காக சண்டைபோடுபவர்கள்,கட்சிமாறுபவர்கள்,சாகும்வரை கதிரையில் இருப்பவர்கள்,கடந்தகால தேர்தல்களில் தோல்விகண்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.

மாறாக கிழக்கில் புதிய மற்றும் முற்போக்குள்ள இளைஞர்களை முன்நிறுத்தி,சமூகத்தின் அடுத்த கட்ட அரசியலை திடமாக முன்னெடுக்கும் ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்குவது அவசியமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -