இவ்வாறு வெவ்வேறு நியமனங்களை பட்டதாரிகளுக்கு வழங்கியதால், தற்போது அவர்களுக்கு தீர்ப்பதற்கு சாத்தியமற்ற பல பிரச்சினைகள் தோன்றியுள்ளது. இந்நிலைமையை தற்போதைய அரசு என்ற வகையில் நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.
பிரச்சினைகளை சரியான முறையில் அணுகினால் மாத்திரமே தீர்வு கிட்டும். கடந்த நாட்களில் பட்டதாரிகளின் தொழில் சங்கங்கள் பல என்னுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் புரிந்துணர்வு ஏற்பட்டது. அப்பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப்பெறுவதற்கு அரசு என்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சென்ற வாரம் அமைச்சில் நடைபெற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "நான் தொழிற்சங்கங்களின் அலுவல்கள் சார்ந்த அமைச்சர் என்ற வகையில் சகலரையும் அனுசரிக்கும் ஒரு பிரஜை. இங்கு குறிப்பிடப்படும் பட்டதாரிகள் சங்கத்துடனும் நான் பேச்சுவார்த்தை நடாத்தினேன். இவர்களுக்குத் தொழிற்பிரச்சினைகள் பல உள்ளன என்ற விடயம் பேச்சுவார்த்தையில் தெரிந்தது. சிலர் ஒரே தடவையில் ஒன்றாக வேலைக்கு வந்தவர்களில் சிலர் உதவிப் பணிப்பாளராக உயர்ந்துள்ளதுடன், சிலருக்கு அவ்வாறு கிடைக்காமல் ஒரே பதவியில் அப்படியே இருக்கின்றனர்.

இவ்வாறு நடைபெறுவது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதிலுள்ள வழுக்கல்களாகும். இன்னும் சில பட்டதாரிகளுக்கான சேவைகளுக்கு உரிய சேவைக்குறிப்புக்கள் இல்லை. சம்பளப்பிரச்சினைகள் போன்று பதவி உயர்விலும் பல பிரச்சினைகள் பற்றியும் பேச்சுவார்த்தையின் போது என்னிடம் சொல்லப்பட்டது, இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசு என்ற வகையில் நாங்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து வருகிறோம்.
இங்கு ஒரே நேரத்தில் நியமனம் பெற்றவர்களுக்கு சம அளவிலான உரிமைகள் கிடைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் முன்னைய அரசாங்கம் செய்த தவறைத்தான் நாங்கள் சரி செய்யவுள்ளோம்.
இங்கு ஒரே நேரத்தில் நியமனம் பெற்றவர்களுக்கு சம அளவிலான உரிமைகள் கிடைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் முன்னைய அரசாங்கம் செய்த தவறைத்தான் நாங்கள் சரி செய்யவுள்ளோம்.
போராட்டங்களை செய்கின்ற சங்கங்கள் நாங்கள் இவ்வளவு காலமாக அவர்களுடைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு நன்றிகளைத் தான் தெரிவிக்க வேண்டும். இன்று எமது அமைச்சு இது சம்பந்தமான யோசனைகளை பரிசீலித்துப் பார்த்து வரைவுகளைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது.
அவ்வாறு இருக்கும் போது தான் தொழிற்சங்கங்கள் காலக்கெடு விதித்து அச்சுறுத்த முயற்சிக்கிறது. நான் சொல்வது என்னவென்றால், என்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான சக்தி எம்மிடமுள்ளது.
இன்று போராட்டம் செய்பவர்கள் அன்று அவ்வாறு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அவர்களே அறிந்தது. அந்தளவு எமது அரசு தொழிற்சங்கங்களுக்கு போராட்டங்களை நடாத்த இடமளித்துள்ளது. இதனை சில அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக பாவிக்கின்றதை நாம் காண்கிறோம். அவ்வாறு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஆடும் தொழிற்சங்கங்கள் அந்த அரசியல்வாதியின் நலனுக்காக அரசாங்கத்தினை சங்கடத்துக்குள்ளாக்கும் வேலையையே செய்கின்றன. நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம், இவ்வாறான சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு.

ஆயினும் இப்பிரச்சினைகளுக்கு தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமாக தீர்வினை வழங்குவதற்காக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் என்ற வகையில் நானும் எனது அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி
ஊடக ஒன்றியம்
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி
ஊடக ஒன்றியம்
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு