ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கல்முனை - பாண்டிருப் பெரிய குளத்தில் நீரில் மூழ்கிய நிலையில் இன்று (14) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நற்பிட்டிமுனை - 01 ஐ சேர்ந்த அசன் ஹபீபுல்லாஹ் (வயது-43) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான அசன் ஹபீபுல்லாஹ் (13.07.2017) மாலை 8.00 மணியளவில் காணாமல் போனதையடுத்து உறவினர்கள் தேட ஆரம்பித்தனா். இன்னிலையில் சடலம் குறித்த இடத்தில் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை அடையாளம் கண்டனா்.
ஸ்தலத்திற்கு வருகைதந்த கல்முனை மாவட்டநீதிபதி ஐ.பி.பாயிஸ் றஸாக் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதைனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
