ஊடகப்பிரிவு-
திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப்பிரட்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடந்த வியாழக்கிழமை அப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இப்பகுதியில் 30 வருடங்களுக்கு அதிகமாக மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கூறி அப்பகுதியை இயந்திரங்களை கொண்டு துப்பரவாக்கியதன் பின்னரே இந்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதன்போது சர்ச்சைக்குரிய காணியின் உறுதிப்பத்திரம் (89ஏக்கர்) வைத்திருப்பவர்களுக்கு காணி உறுதியின் பிரகாரம் காணியை வழங்குவதென்றும் மிகுதி காணியின் ஒரு பகுதியில் வீட்டு திட்டம் ஒன்று அமைக்கவும்இ மற்றைய பகுதியை இப்பகுதியில் 30 வருடங்களாக குடியிருந்த மக்களுக்கு பகிர்ந்தளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விஜயத்தில் குசெவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் இகாணி உத்தியோகத்தர் இபிரதேச பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


