வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்கம் கவிஞர்மலைத்தம்பி அரங்கில்


டந்த பௌர்ணமி தினமான 8-7-2017 வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்க நிகழ்வுமறைந்த மலையக கவிஞர் மலைத்தம்பி அரங்கில் நடைபெற்றது. கொழும்பு அல் ஹிக்மாகல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வகவத் தலவைர் என். நஜ்முல் ஹுசைன் தலைமைதாங்கினார்.

பிரான்ஸ் தமிழ் வானொலியின் இயக்குனர் கவிஞர் சரவணையூர் விசு செல்வராஜா அவர்கள்பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு அனைத்து நிகழ்வுகளும் தமது வானொலியில்நேரடியாக ஒலிபரப்பாக ஆவன செய்திருந்தார். அதன் மூலம் சர்வதேசமெங்கும் வகவநிகழ்வுகள் ஒலித்தது குறிப்பிடத்தக்கது. செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன்வரவேற்புரையாற்ற கவிஞர் ஈழ கணேஷ் நன்றியுரை வழங்கினார்.

அண்மையில் மறைந்த மலேசிய கவிஞரும் அறிவிப்பாளருமான மைதி சுல்தான் நினைவுகூரப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கற்று டாக்டராகி இருக்கும்சத்திய எழுத்தாளரும், வகவ ஸ்தாபக உறுப்பினருமான எஸ். ஐ. நாகூர் கனி அவர்களின் மகள்ருஷைக்கா கனிக்கு வாழ்த்தையும், தனது எழுத்திலே கண்ட கனவை நிதர்சனமாக்கிய நாகூர்கனி அவர்களுக்கு பாராட்டையும் வகவம் தெரிவித்தது.

கவிஞர் மலைத்தம்பி அவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை அதிதிகளாக கலந்துகொண்ட எழுத்தாளரும் "கொழுந்து " சஞ்சிகை ஆசிரியருமான அந்தனி ஜீவாவும் , தினகரன்ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவரும், மறைந்த கவிஞரின் அண்ணன் மகனுமான லோரன்ஸ்செல்வநாயகமும், வகவ தேசிய அமைப்பாளருமான மேமன் கவியும் முன் வைத்தனர். விசேடஅதிதி விசு செல்வராஜா அவர்களும் தனது உரையிலே கவிஞர் மலைத்தம்பி குறித்து பலதகவல்களை வழங்கினார்.

“இராயப்பன் ஐசேக் என்ற இயற் பெயர் கொண்டவர் கவிஞர் மலைத்தம்பி. கண்டிமாவட்டத்தைச் சேர்ந்த உழுகங்கை என்ற ஊரைச் சேர்ந்தவர். மலைத்தம்பி அவர்கள் பிரபலதமிழ் பத்திரிகையாளருமாவார்.

தமிழ் இலக்கியங்களைத் தெளிவுறக் கற்றறிந்த இலக்கியவாதியாக, சிறந்தபத்திரிகையாளராக ஒரு மரபுக் கவிஞராக, இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஒருசமூகவாதியாகவும் இரா. ஐசெக் திகழ்ந்தார்.

தனது இலக்கியத்துக்கு அப்பால் சிறந்த கலைஞராகவும் விளங்கினார். மலைத்தம்பி ஓர்இனிமையான பாடகர். சிறந்த நாடக நடிகர் என்ற சிறப்புக்கெல்லாம் பாத்திரமாகி நின்றார்.



ஆரம்ப காலத்தில் வீரகேசரி பத்திரிகை காரியாலயத்தில் ஒப்பு நோக்காளர் பதவியில்தொழில் புரிந்தார். வீரகேசரி நிறுவனத்தில் நடந்த ஒரு ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மு.சிவலிங்கம் தயாரித்தளித்த ‘கங்காணி காளிமுத்து’ என்ற நகைச்சவை நாடகத்தில்மலைத்தம்பி கங்காணியாகவும் இன்றும் வீரகேசரியில் பணிபுரிந்து வரும் துவரம்பிட்டிசண்முகம் குடிகார கணவனாகவும் மனைவி அழகம்மாவாக சிவலிங்கமும் நடித்துரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர். மலைத்தம்பியின் பத்திரிகை, ஊடகப் பணி 61இலிருந்து அவர் மறைந்த காலம் வரை தொடர்ந்தது. வீரகேசரியில் பத்திரிகை ஜாம்பவானாகஇருந்த கே. வி. எஸ். வாஸ் தினபதி எஸ். டி. சிவநாயகம் போன்றோருடன் இணைந்து தொழில்செய்தார். பின்னர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்களில்ஒருவராகவும் பணி புரிந்தார்.



அதன் பின்னர் தேசிய முரசொலி ராஜாளி போன்ற பத்திரிகைகளிலும் தொழில் புரிந்தார்.



ஆரம்ப காலத்தில் கவிஞர் மலைத் தம்பியின் கவிதைகள் யாவும் மலையகத்தின் இயற்கைஅழகைப் பற்றி பாடியதாகும். கவிஞர் மலைத்தம்பி கவிதைகளோடு நிறைய சமுதாயஎழுச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 75 க்குப் பிறகு, மலையக அரசியலும் ஆரம்ப காலத்துகங்காணித்துவ முறையைப் போலவே தொடர்ந்து வருவதைக் கண்டு, ஆத்திரம் அடைந்தார்.



அதன் பின்னர் அவரது கவிதைகள் யாவும் மலையகத் தொழிற்சங்கவாதிகளைப் பற்றியும்,கட்சி அரசியல்வாதிகளைப் பற்றியும் விமர்சனம் செய்யும் சமூக எழுச்சிக் கவிதைகளாகவேஅமைந்தன. அனைத்து தேசிய நாளேடு, வார ஏடுகளில் மலைத்தம்பியின் கவிதைகள்தொடர்ந்து வெளிவந்தன.





கவிஞர்கள் சில்லையூர் செல்வராஜன் இ. முருகையன், இலங்கை வானொலி பணிப்பாளர்பரராஜசிங்கம் ஆகியோரும் மலைத்தம்பியின் நண்பர்களாவர்.



கவிஞர் மலைத்தம்பி 1995ம் ஆண்டளவில் கொட்டகலையில் தனது கவிதைத் தொகுப்புவெளியீடு சம்பந்தமாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இலக்கிய நண்பர்களானகலைஞர் பிரான்ஸிஸ், சாரல் நாடன், சு. முரளிதரன், அந்தனி ஜீவா, மு. சிவலிங்கம்ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார்.



இவரது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு வேலைகளில் மேற்குறிப்பிட்ட நண்பர்கள்ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வாகன விபத்தில் அகால மரணமடைந்தார்.



கவிஞர் மலைத்தம்பியின், புகழ் உடம்பை கலாபவனத்தில் வைத்து கெளரவம் செய்வதற்காகஇலக்கிய நண்பர்களான பிரான்சிஸ் சு. முரளிதரன், சாரல்நாடன், அந்தனி ஜீவா, மு.சிவலிங்கம், இர. சிவலிங்கம் ஆகியோர் அன்றைய கலாசார அமைச்சர் லக்ஷ்மன்ஜயக்கொடியைச் சந்தித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து அம் மலையக கவிஞருக்குகௌரவமளித்தனர்

கவிஞர் அமரர் மலைத்தம்பியின் கவிதைத் தொகுப்புக்கான பணிகள் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மலையக கவிதை இலக்கியத்தின் பெறுமதிமலைத்தம்பியின் கவிதைத் தொகுப்போடு மேலும் மகத்துவம் பெறும் என்பதில் எவ்விதஐயமுமில்லை” என்று கவிஞர் மலைத்தம்பி பற்றிய நினைவுகள் முன்வைக்கப் பட்டன.



பிரான்ஸ் தமிழ் வானொலி இயக்குனர் விசு செல்வராஜா அவர்கள் உரையாற்றும்போது,வகவத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். பலவிதகருப் பொருள்களைக் கொண்ட கவிதைகள் இங்கே வாசிக்கப்பட்டன. சில
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -