வவுனியாவில் இளைஞர் கொடி தினம்!! படங்கள் இணைப்பு






தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற கொடி தினம் இன்று வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் இன்று (26/07/2017) அனுஷ்டிக்கப்பட்டது.

வருடாந்த இளைஞர் கொடி தினம்,இளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், இளைஞர் கழக மாவட்ட சம்மேளனங்களின் அபிவிருத்தி செய்யும் பொருட்டு செயற்படுத்தப்பட்டுள்ளதோடு இதன் மூலம் இளைஞர் கழக செயற்பாட்டினை மிகவும் வலுவுடன் முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.

வவுனியாவில் உத்தியோகபூர்வமாக இளைஞர் கொடி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் உதயராஜா, பிரதேச செயலக கணக்காளர் ஜெயபாஸ்கரன், நகரசபை செயலாளர் தயாபரன் அவர்களுக்கு உத்தியோகபூர்வாக கொடிகள் அணிவிக்கப்பட்டன.

அரசாங்க திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வியாபார நிலையங்களில் இளைஞர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் ந.குணவர்மன், முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரி ரா.சசிகரன், விளையாட்டு உத்தியோகத்தர் தா.விந்துஜன் மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு இளைஞர் கொடி தினம் நாடளாவிய ரீதியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ​

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -