எம்.எம்.ஏ.ஸமட்-
இது குறித்து பிரதேச மக்கள் தெரிவிப்பதாவது,
கல்முனை பிரசேத்தின் சில வீதிகள் பல வருடங்களின் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும் பெருமளவிலான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தும் குறித்த இவ்வீதி குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது
இவ்வாறு நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாது காணப்படும் இவ்வீதியினை பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயன்படுத்துவோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு இவ்வீதியின் அவலநிலை காரணமாக விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்..
இவ்வீதியைப் புனரமைக்குமாறு பல முறை அதிகாரத்தரப்புக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அக்கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலையியில் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வீதி உரியமுறையில் அபிவிருத்தி செய்யப்படாததன் காரணமாக கோடை காலங்களில் இவ்வீதியினால் வானங்கள் செல்லும்போது எழும் புழுதியானது இவ்வீதியை அண்டியுள்ள வீடுகளை அசுத்தப்படுத்துவதுடன், புழுதியினால் சுவாச நோய்கள் ஏற்படும் என அஞ்சுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் கால வாக்கு அறுவடைக்காக இவ்வீதிகளுக்கு வரும் அரசியல்வாதிகளும் கட்சித் தலைமைகளும் இம்மக்களின் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இவ்வீதியைப் புனரமைக்க முன்வருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதேவேளை, இவ்வீதியானது மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர் மன்சூரின் அரசியல் அதிகாரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் இறுதியாக அபிவிருத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.