பெர்லினில் இம்மாதம் 9 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்க காஞ்சனமாலா அங்கு சென்றுள்ளார். இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை பாராலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் உரிய நேரத்தில் அவருக்கு கிடைக்குமாறு அனுப்பாததால் காஞ்சனமாலா ஜெர்மனியில் மற்றவர்களிடம் கடன் வாங்கி நாடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பெர்லின் போட்டியில் பங்கேற்க, தான் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், ஹோட்டலில் தங்கியதற்கு 70,000 ரூபாயும் உணவுக்கு 40,000 ரூபாயும் இன்னும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காஞ்சனமாலாவை தவிக்கவிட்ட அதிகாரிகளை கண்டித்தும், பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துப்பாக்கிச் சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அதில் பதில் அளித்துள்ளார்.
