மு.கா வை விட்டு வெளியேற இருந்த அணி முதலமைச்சரின் முயற்சியால் தடுப்பு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் மாகாண சபைத் தேர்தல்களிலும் மற்றும் பொதுத் தேர்தலிலும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டு வந்த அணியொன்று அலிஸாஹிர் மௌலானாவோடு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக வெளியேறிச் செல்லவிருந்த நிலைமை முதலமைச்சரின் முயற்சியால் தவிர்க்கப்பட்டதாக முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் இஸற்.ஏ. ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

இதுபற்றி திங்கட்கிழமை 24.07.2017 விவரம் தெரிவித்த அவர், 

ஏறாவூர் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுடன் செயற்பட்டுவந்த அவரது ஆதரவு அணியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றி எடுப்பதற்கு அல்லது செயற்படாமல் வைத்திருப்பதற்கு எதிரணியினர் முயற்சித்திருந்தனர்.

இந்த விடயத்தை அறிந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தக்க தருணத்தில் சாதுரியமாகச் செயற்பட்டு ஆதரவு அணி வெளியேற்றத்தைத் தடுத்து மீண்டும் ஸ்ரீலமுகா வுக்குள் கொண்டு வந்தார்.

சுமார் 150 பேர் கொண்ட அந்த அணியை தமது பக்கம் சாய்த்துக் கொள்வதற்கு பல்வேறு அரசியல் எதிராளிகள் தங்களை ஊக்கப்டுத்தியதாக முதலமைச்சரிடம் வந்து தமது ஆதரவை வெளிப்படுத்திக் கொண்ட குழுவினர் தெரிவித்தனர்.

உத்தியோகபூர்வமாக தாங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரோடு இணைந்து கொண்டதாகவும் எதிர்வருகின்ற தேர்தல்களிலும் அபி;விருத்தித் திட்டங்களிலும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இருக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -