புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று [16.07.2017] காலை 8.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தில் திருநாவற்குளம் இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் அனோஜன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
ஆரம்ப நிகழ்வாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கழகத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


