கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்: எட்டு பேர் மரணம்

ஐ. ஏ.காதிர் கான்-
ம்பஹா மாவட்ட சுகாதார அதிகாரப் பிரிவில், இதுவரை 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இருப்பது பதிவாகியுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இடையிடையே மழை விட்டு விட்டுப் பேய்வதால் இந்நிலை தொடர்ந்தாலும், பொது மக்களின் போதிய ஒத்துழைப்பு இன்னும் சரியான முறையில் கிடைக்காததும், டெங்கு நோய் தொற்று குறிப்பாக இவ்வாறு பெருகக் காரணமாக அமைந்துள்ளதாக, கம்பஹா சுகாதார சேவைகள் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர், தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரொஹான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது விசேடமாக, நீர்கொழும்பு பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்று மிகவும் உக்கிரமம் அடைந்துள்ள நிலையில், கடந்த ஆறு மாத காலப் பகுதிக்குள், நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் மாத்திரம், டெங்கு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த எட்டு பேர் இதுவரை மரணமாகியுள்ளதாகவும் டொக்டர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். வைத்தியசாலை சுற்றுச் சூழலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நமது வீடு மற்றும் தோட்ட சுற்றுச் சூழல்களையும் எந்நேரமும் துப்பரவாக வைத்துக் கொள்வதற்கு, "நாம்" என்ற நோக்கில் அனைவரும் இத்தருணத்தில் ஒன்றுபடுமாறும், இதற்காக வாரத்தில் 10 அல்லது 15 நிமிடங்களை ஒதுக்கி டெங்கு நோய் தொற்றை முற்றிலும் இல்லாதொழிக்க முன்வருமாறும், டொக்டர் அனைத்து பொதுமக்களையும் கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -