ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில் சுற்றுலாத் தகவல் மையம்

ட்டக்களப்பு ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள சுற்றுலாத் தகவல் மையம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று (25.07.2017) நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன் போது அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தந்ததுடன் அதன் நிர்மாணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்,

குறித்த சுற்றுலாத் தகவல் மையத்தில் பயிற்சிக் கூடங்கள் கலாசார மண்டபங்கள் மற்றும் வர்த்தகத் தொகுதிகள் என பல்வேறு அம்சங்கள் அடங்குகின்றன.

இதன் மூலம் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதுடன் கிழக்கின் சுற்றுலாத்துறை அமைச்சரான கிழக்கு முதலமைச்சரின் நீண்டகால கனவான கிழக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் இதுவொரு மைல்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -