உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் தெளிவில்லாமல் யாரும் சமூகத்தை பிழையாக வழிநடத்தக்கூடாது ! இதுவரை எந்த ஒரு வரைவும் வெளிவராத புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக றிஸ்வி முப்தி கருத்துவெளியிட்டமைக்கான காரணம் என்ன என்பதை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார். அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அஸ்கிரிய பீடமானது தற்போது கொண்டுவர சிந்திக்கப்படும் அரசியலமைப்பை நிறுத்தும் வகையில் தனதுகோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தது.இதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்விமுப்தி அஸ்கிரிய பீடமானது தனது குறித்த கருத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.இதனைஉலமா சபையின் கருத்தாக கூறியுள்ளமை இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இன்று இந்த அரசியலமைப்பானது நாட்டின் நலன் மீது அக்கறையினால் கொண்டு வரப்படுகிறதா அல்லதுசர்வதேச அழுத்தங்களினால் கொண்டுவரப்படுகிறதா என்ற விடயம் யாவரும் அறிந்ததே. தற்போதுகொண்டுவரப்பட உள்ள அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட பலவற்றில்மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாற்றங்கள் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையக் கூடியசாத்தியக் கூறே அதிகம் காணப்படுகிறது. இப்படி இருக்கையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின்தலைவர் ரிஸ்வி முப்தி இதனை ஆதரிப்பதாக கூறுவதேன்? அப்படி ஏதேனும் முஸ்லிம்களுக்கு சாதகமான அல்லதுநாட்டுக்கு சாதகமான விடயம் வருவது பற்றி அவர் அறிவாரா?
இக் கருத்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்தென்றால் இத் தீர்மானம் எப்போது அகில இலங்கைஜம்மியத்துல் உலமாவால் எடுக்கப்பட்டது என்பதை கூற வேண்டும்.இதனை தனியாக றிஸ்வி முப்தியால் கூறமுடியாது.இது தொடர்பில் முடிவு எடுக்கும் வகையில் அவருக்கு அரசியலமைப்பு தொடர்பான அறிவுஇருப்பதாகவும் நான் நம்பவில்லை.அது மாத்திரமல்லாது குறித்த அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில்முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முஸ்லிம்கள் சார்பான விடயங்களின் முன் மொழிவை தற்போதையஆட்சியாளர்களிடம் முன் வைத்துள்ளதா என்ற விடயத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.
அரசு இன்னும் அரசியலமைப்பு தொடர்பான எவ்வித வரைவுகளும் வெளிப்படவில்லை. இப்படி இருக்கையில்அரசியலமைப்புக்கு ஆதரவான கருத்துக்கள் பொருத்தமானதல்ல.நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் பற்றிபிரச்சினைகள் உள்ள போது அவைகள் பற்றிப் பேச வருடக் கணக்கில் எடுக்கும் அகில ஜம்மியத்துல் உலமாதேவையிலாமல் அஸ்கிரிய பீடத்துக்கு அறிவுரை கூறுவது வேலியால் சென்ற சனியனை பக்கத்தினுள்போட்டுக்கொண்ட கதையாகிவிடும்.இந்த விடயத்தில் அகில உலமாவின் அறியாமையானது முஸ்லிம்சமூகத்துக்கு சாபக்கேடாக அமைந்துவிடலாம் என்பதில் அவ்வமைப்பின் தலைவரும் முஸ்லிம் சமூகம் மிகக்கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.