இலங்கைக்கான் கட்டார் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

லங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ராஷித் ஷபீஃ அல்-மர்ரீ அவர்கள் அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களை சந்தித்து இருதரப்பு நல்லுறவுகள் சார்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

வளைகுடாவில் நிலவுகின்ற இராஜதந்திர நெருக்கடி எந்த வகையிலும் இரு தரப்பு உறவுகளையோ பொருளாதார நெருக்கடிகளையோ ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், கட்டார் தேச மக்களுக்கோ அங்கு தொழில் புரிபவர்களுக்கோ எந்த வகையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்த கட்டார் அரசு அனுமதிக்க மாட்டாது என்றும் அடிப்படைகலற்று உணமிக்கு மாற்றமான பரப்புரைகளால் பிழையாக வழி நடாத்தப் பட வேண்டாம் என்றும் கொழும்பிலுள்ள காட்டார் தூதரகம் அறிக்கை யொன்றின் மூலம் இலங்கை வாழ் மக்களை அறிவுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை நியமங்களை மீறி ஒரு சில அண்டை நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் கட்டாருடனான வழமையான உறவுகளை உலக நாடுகள் வலுப்படுத்தி வருகின்றமையும் கூடிய விரைவில் நெருக்கடி நிலைமைகள் முடிவிற்கு கொண்டுவரப்படுவதற்கான சாதகமான சமிக்ஞைகளை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தகவல்: கட்டார் தூதுவராலயம் - கொழும்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -