மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் பொருற்களுடன் இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் பொலிஸாரின் விஷேட சோதனை நடவடிக்கையின் போது மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் -கத்தி-கோடரி மற்றும் 284 ஈய குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் இரண்டு பேரை நேற்றிரவு (16) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை-யான் ஓயா பகுதியைச்சேர்ந்த சீனி முகம்மது சுலைமான் லெப்பை (54வயது) மற்றும் றத்மலை பகுதியைச்சேர்ந்த ஹனீபா ரவூப் (45வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் ரொட்டவெவ-மிரிஸ்வெவ உள் வீதியினூடாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீதிச்சோதனை சாவடியிலிருந்த பொலிஸாரை கண்டு மோட்டார் சைக்கிளை திருப்பிச்சென்ற போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதினால் துறத்தி சென்று சோதனையிட்ட வேளை மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் பொருற்கள் கைப்பற்றப்பட்டதாகவும் துப்பாக்கியை காட்டில் மறைத்து வைத்து தொடர்ச்சியாக வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -