க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை நகரத்தில் 04.06.2017 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ‘கொத்மலை’ டிபோவின் கட்டுப்பாட்டிலுள்ள பேரூந்து ஒன்று தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா வரை சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ் விபத்தினை ஏற்படுத்திய பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.