இலங்கைத் திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய பணியாளர்கள் இவ்வார இறுதிக்குள் நியமிக்கப்படுவர்


கஹட்டோவிட்ட ரிஹ்மி -

மீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கமைய, ஒவ்வொரு அமைச்சின் பணிகளில் சில மாற்றமடையும் நிலை ஏற்பட்டது. அதற்கமைய அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிற்கு மேலும் 3 நிறுவனங்கள் கிடைத்துள்ளன. அவை தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அரச அச்சுக் கூட்டுத்தாபனம் என்பவாகும். இவற்றில் அரச திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்காக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவதானத்தைச் செலுத்தி வருவதுடன், இந்த வாரத்தினுள், தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் குழுவினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டு சினிமாவை, வளர்ச்சிக்கான இலக்கினை நோக்கி செலுத்துவதற்கு புதிய பணியாளர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் தேசிய ரீதியிலான சினிமா தொழில் நுட்பத்தினை வளர்ப்பதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எம்மிடம் தெரிவித்தார். இதன் மூலம் கூட்டுத்தாபனத்தில் மாற்றங்களுக்கான தேவை ஏற்பட்டால், அவையனைத்தும் தன்னுடைய மேற்பார்வையில் இடம்பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு காலமும் அரச சேவையினை முன்னேற்றுவதற்காக பணிபுரிந்துகொண்டிருந்த எனக்கு, மேலும் 3 நிறுவனங்களை வழங்கியதற்காக அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இருவரும் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன். அத்துடன் இதற்கு ஊடகங்கள் உச்ச அளவில் பங்களிப்புச் செய்ய வேண்டும். தனது அமைச்சின் கீழ் வந்திருக்கும் தேசிய திரைப்படத்துறையினை வளர்ச்சியடையச் செய்வதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று ஏனைய நிறுவனங்களான அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அரச அச்சுக் கூட்டுத்தாபனம் ஆகியன சம்பந்தமாக எதிர்வரும் நாட்களில் அதிக கவனத்தை செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -