தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கூறுபோடுவதற்கு இடமளியோம்-தர்மலிங்கம் சித்தார்த்தன்,

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூறு போட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என புளொட் இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபைச் சிக்கலின்போது சமரசப் பேச்சாளராகச் செயற்பட்டவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக புதன்கிழமை 28.06.2017 ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ

வட மாகாண சபையில் அண்மையில் நிலவிய குழப்பகரமான நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பலரின் வாய்க்கு அவலாக அமைந்திருந்தது.

ஆனால், எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

எங்களது ஒரேயொரு நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடக் கூடாது என்பதுதான். அவ்வாறுதான் தொடர்ந்தும் செயற்படுவோம். இன்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உடைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

அவ்வாறு உடைவதனால், அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசுக்குள்ளே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்.

அதனடிப்படையிலேயேதான் இந்த அரசியலமைப்பு மாற்றம், நியாயமான தீர்வொன்று கிட்டும் வரை அல்லது இப்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் ஒரு முடிவு நிலைக்கு வரும்வரையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் உடைவினை நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பின்னடைவினையே தரும்.

தமிழ்த் தரப்பு மீது பழிகளைப் போட்டுவிட்டு தான் தப்பிக்கும் வழிகளைத்தான் அரசு தேடிக்கொண்டிருக்கின்றது.

எங்களது தவறினால்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க முடியாமல்போனது என்பதனை சர்வதேசத்துக்குக் காட்டவே அரசு சந்தர்ப்பம் பார்த்திருக்கின்றது.

எங்கள் பக்கத்தில் தவறிருப்பதாக சர்வதேசமும் எண்ணினால் போதும், அது அரசுக்கு பாரிய வெற்றிதான்.

சர்வதேசம் தொடர்ந்தும் எங்களுக்கு தரக்கூடிய ஆதரவினை நாங்களாகவே இழந்துவிடக் கூடாது. எனவேதான் கூட்டமைப்பின் ஒற்றுமை, எமது அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலமைப்பொன்றின் தேவை பற்றியெல்லாம் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது நான்கு கட்சிகளின் கூட்டு. நான்கு கட்சிகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறான கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்லவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -