கிண்ணியா மூதூர் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் மண் கொள்ளையை தடுத்த நிறுத்தவும் -அன்வர் சபையில் காட்டம்

கிழக்கு மாகாண சபையின் சபை அமர்வு சபை தவிசாளர் கலப்பதி தலைமையில் 21(புதன்கிழமை) காலை 9.30 மணியில் ஆரம்பிக்கப்பட்டது


கிண்ணியா மூதூர் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் மண் கொள்ளையை தடுத்த நிறுத்த மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான அன்வரால் அவசர பிரேரணை சமப்பித்து தொடர்ந்து அன்வர் உரையாற்றுகையில்

மாஹாவெலி கங்கையின் முடிவிடமான திருகோணமலை கிண்ணியா மூதூர் பிரதேசங்களிலுள்ள சீனன்வெளி மணலாறு சாவாறு நிலாப்பொல கண்டல் காடு பாடுகாடு போன்ற பகுதிகளில் அதிகமான மண் அகழ்வு இடம்பெற்று சூழவுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன் கங்கை பெறுக்கெடுத்தால் பல உயிர்கள் உடைமைகள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் சுமார் 15 க்கு மேற்பட்ட ஆறுகள் சில பெறுக்கெடுப்பினால் பல உயிர்கள் மற்றும் உடைமைகள் காவு கொள்ளப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஆட்டத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் ஒரு அழிவை திருகோணமலை மாவட்டம் எதிர்கொள்ள அனுமதிக்க முடியாது 395 மண் அகழ்வு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் அவற்றில் 80 வீதமான மண் ஏற்றுமதி வெளி மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிகமானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களைகுறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கையில் ஜனாதிபதி சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காடழிப்பை கட்டுப்படுத்தும் அதேவேளை திருகோணமலையில் இடம்பெறும் மண் கொள்ளையை ஏன் கருத்தில் கொள்ள முடியாது


மேலும் குறித்த மண் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் மாலை 6 மணி முதல் மூதூரில் இருந்து கிண்ணியா பிரதேசத்தின் சன நடமாட்டமுள்ள நகர பகுதியினூடாக பயணிப்பானதால் தேவையற்ற விபத்துக்கள் இடம்பெறுகின்றன அதனால் பிரதேச மக்கள் கடும் விசனத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட அன்வர் இலங்கையில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு இந்த மண்ணை ஏற்றுமதி செய்யும் ஒரு தளமாக திருகோணமலை மாத்திரமே காணப்படுவதாகவும் சில மாவட்டங்களில் இந்த மாஹாவெலி கங்கையில் மண் அகழக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் திருகோணமலையை மாத்திரம் பயன்படுத்தி மண் அகழ்வை மேற்கொள்கின்றனர் இந்த நடவடிக்கையினால் திருகோணமலை மாவட்ட மக்களை பழிகொடுக்க முடியாது எனவும் அவைகள் உடனடியாக ஜனாதிபதி பிரதமர் உரிய திணைக்களத்தின் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கும் சபையின் ஏகோபித்த தீர்மானத்தை அனுப்பி வைக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார்


அதற்கமைவாக சபாநாயகர் கலபதி அவர்கள் ஏகோபித்த முடிவின்மூலம் குறிப்பிடப்பட்ட விடயத்தை அனுமதிக்க முடியாது உடனடியாக இந்த விடயம் தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனவும் தான் மாகாண சபையே இதற்கு பொறுப்பு என்ற அடிப்படையில் விரைவாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -