கடந்த 13ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) உயர்நீதின்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்தே குறித்த மனு மீளப்பெறப்பட்டுள்ளது.
சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுக்காக ஞானசார தேரர் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஆ)
