சேவைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் - கிழக்கு மாகாண பிரதம செயலாளர்

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ரச உத்தியோகத்தர்களின் சேவைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டே அரச அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.எம். அபயகுணவர்த்தன தெரிவித்தார். ஜனதாக்ஸன் நிறுவனத்தினால் போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள 43 சன சமூக நிலைய அமைப்புக்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான காகிதாதிகளும், மண்முனை தென் மேற்கு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 சன சமூக நிலைய அமைப்புக்களுக்கும், போரதீவுப்பற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 சன சமூக நிலைய அமைப்புக்களுக்குமாக மொத்தம் 10 சன சமூக அமைப்புக்களுக்கு தலா 10000 ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு போரதீவுப் பற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (20.06.2017) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ மக்களின் பங்கேற்புடன் கொள்கை மற்றும் தீர்மானங்களை எடுக்கும் நோக்குடன் செயற்பாட்டு ரீதியில் கொண்டு செல்லும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முன்மாதிரியாகச் செயற்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று மற்றும், மண்முனை தென் மேற்கு ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் நாம் தெரிவு செய்துள்ளோம்.

இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வேண்டு அரச அதிகாரிகளும், மற்றும் ஜனதாக்ஸன் நிறுவன உத்தியோகத்தர்களும் பல பிற்சிகளைப் பெற்றுள்ளார்கள். அரச அலுவலர்கள் அவர்கள் எந்த திணைக்களத்தில் கடமை புரிந்து வந்தாலும் அவர்களது நோக்கம் என்பது சேவைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். பிரதம செயலாளராக இருந்தாலும், பிராந்திய ஆணையாளராக இருந்தாலும், அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்தலும் அனைத்து அரச அலுவலர்களின் ஒட்டுமொத்த நோக்கம் மக்களுக்கு சேவைகள் சென்றடையச் செய்வதுதான்.

பிரதேச சபைகளினூடாக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் கிராம மட்டங்களிலே அமைந்துள்ள சனசமூக நிலைய சங்கங்களுடாகக் கொண்டு செல்வதுதான் அவர்களின் கடமைப்பாடாகும். இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா. சித்திரவேல், போரதீவுப்பற்று மற்றும், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைகளின் செயலாளர்கள், ஜனதாக்ஸன் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -