தென் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி றமீஸ் அமெரிக்கா பயணமாகிறார்!

எம்.வை.அமீர்-

தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும்,அப்பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பணிப்பாளரும் அப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளருமாகிய கலாநிதி றமீஸ் அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி "சமய பல்வகைத்தன்மை"(Religious Pluralism) எனும் இரண்டு (02) மாதகால சிறு பயிற்சிநெறிக்காக புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா பயணமாகிறார். இப்பயிற்சி நெறி,அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான டெம்பில்பல்கலைக்கழகத்தில் (Temple University) இடம்பெறவிருக்கிறது. உலகில் பல பாகங்களில் இருந்தும் 18 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு இலங்கையில் இருந்து இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது ஆரம்பக்கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும், பல்கலைக்கழக கல்வியை தென் கிழக்கு மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், தனதுகலாநிதி படடப்படிப்பை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார்.

இனமுரண்பாடு, சமயசகிப்பின்மை(Religious intolerance) போன்ற சிக்கல்களால் நிறைந்த இலங்கை போன்ற நாடுகளுக்கு இவரின் இப்பயிற்சி நெறி பல்வேறு வகையில் உதவும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -