தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் பயிற்சிப்பட்டறையும் சான்றிதழ் வழங்கலும்!


எம்.வை.அமீர் யூ.கே.காலிதின்.-

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் இம்முறையும் கதீப் மற்றும் முஅத்தின் மார்களுக்கான சமய, சமூக பயிற்சிப்பட்டறையும் சான்றிதழ் மற்றும் உதவி வழங்கும் நிகழ்வு பள்ளிவாசலில் 2017-06-18 ஆம் திகதி தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் செயலாளர் யூ.கே.காலிதின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துள் உலமா சபையின் சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.சலீம் (ஷர்கி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முன்மாதரியான இமாமும் முஅத்தினும் எனும் தலைப்பில் அஷ்செய்க் ஏ.எம்.றியாஸ் (பயானி) யும் அதானும் அதன் முறைகளும் எனும் தலைப்பில் அஷ்செய்க் யு.எல்.அப்துல்லாஹ் ஜமால்(ஹிழ்ரி),பேஷ் இமாம் தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் அவர்களும் கண்ணியமான இமாம்களும் முஅத்தின் மார்களும் எனும் தலைப்பில் நிந்தவூர் அர் றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் ஏ.எம்.அப்துல் ஹமீத் (அஹ்சனி) அவர்களும் விரிவுரைகளை வழங்கிய அதேவேளை துஆ பிராத்தனையை ஸஹ்த் அரபிக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் ஏ.எஸ்.எம்.ஹபீல் அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்வும் இறுதியில் சான்றிதழ்களும் உதவிப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -