சிறுபான்மை மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளையும், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுக்கும் நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எடுத்து வருகிறது.
இந்தத் தொடரில், பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இன்று (30.05.2017) மதியம் இடம்பெற்றது. உயர் ஸ்தானிகராலய கொழும்பு காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும், சர்வதேச சமூகம் முன்னெடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன், நல்லாட்சிக்கானதேசிய முன்னணி சார்பாக அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதித் தலைவர் சிராஜ் மஷ்ஹூர், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், தலைமைத்துவ சபை உறுப்பினர் ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.