கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (23) சபையின் தவிசாளர் கலபதி தலைமையில் ஆரம்பமானது.
அதன் போது, பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அட்டகசாம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர்களான ஆரிப்சம்சுடீன், அன்வர், உதுமாலெப்பை ஆகியோரினால் பேசப்பட்டது.
இதன் போது கடை எறிப்பு, போன்ற கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும், கஹவத்தையில் இன்று காலை இடம்பெற்ற தீக்கிரை சம்பவம் தொடர்பாகவும், ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது சபை தவிசாளரினால் அமைப்புக்களின் பெயர், தனிநபர்களின் பெயர்களை சுட்டிக்காட்ட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டது.
காலை, மெத்தானந்த சிலாவாவினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், கல்வியமைச்சர் தண்டாயுதபானி ஆகியோரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதை தொடர்ந்து இனவாத நடவடிக்கை தொடர்பில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.