றிசாத்தின் ஊடகப்பிரிவு தூக்கத்தில் எழுதாமல் விழிப்புடன்தான் எழுதுகிறார்கள்..!

தான் ஒரு பிரபல எழுத்தாளர் என்ற மமதையில் அமைச்சரின் ஊடகப்பிரிவையும் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களையும் சரமாரியாக விமர்சித்துத் தள்ளியுள்ளதை பார்க்கும்போது இவரது நோக்கம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. அமைச்சரிடம் தன்னை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக் கொள்வதற்காக போடும் குளறுபடிகளேயன்றி அவரது விமர்சனத்தில் எந்த உண்மையுமில்லை என்பதினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவரது குற்றச்சாட்டு என்னவென்றால்; 

முசலி பிரதேச சபையில் இடம்பெற்ற பிரச்சினையின் பின்னணி பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அமைச்சின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்படவில்லை என்பதாகும், குறித்த கதாசிரியருக்கு சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாத காரணத்தினால் வெளியிட விரும்பவில்லை ஆனாலும் தலையில் மூளைக்கு பதிலாக கிட்னி இருக்கிறது என்பதினை அமைச்சின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட பல விமர்சனசனங்களை சுட்டிக்காட்டி நிரூபிக்க முடியும். ஆனால் சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை வெளியிட முடியாது இருக்கின்றது. 

இவர் நினைத்து விட்டார் ஆக்கங்கள் எழுதினால் உடனே அவரைப்போன்று தனது பெயரைப் போட்டு மக்கள் மத்தியில் படம் காட்ட வேண்டுமென்று, அவர் நினைப்பதைப்போன்று அமைச்சரின் ஊடகப்பிரிவு சிலவிடயங்களில் ஆக்கங்களுக்கும் சில கட்டுரைகளுக்கும் அமைச்சின் ஊடகப் பிரிவு என்று மக்களுக்கு காட்ட முடியாத சந்தர்ப்பங்களுண்டு என்பதினைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்கள் உங்களைப்போன்று பேனையும் கையுமாக இருக்க முடியாது. அவரது சந்தர்ப்பங்கள் எவ்வாறு அமைந்திருந்தது என்பது கூடத் தெரியாது கண்டபடியெல்லாம் விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்க விடயம் என்பதினை புரிந்து கொள்ள வேண்டும். 

ஆக மொத்தம் அமைச்சரின் ஊடகத்துறை உங்களைப்போன்று தூக்கத்தில் எழுதாமல் விழிப்புடன் பல விடயங்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதினை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 
சவ்பான் முத்தலி பாவா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -