வவுனியா மாவட்ட இளைஞர் தின நிகழ்வுகள் - படங்கள் இணைப்பு

வுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான இளைஞர் தின நிகழ்வுகள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் (27.05.2017) வவுனியா சிங்கள பிரதேச செயலக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. 

"சுத்தமான இலங்கைக்கு இளைஞர்களின் குரல்" எனும் தொனிப் பொருளில் வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முதல் நிகழ்வாக மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் இளைஞர் மாநாடும் , ஆதி இளைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர்களினால் "திண்ம கழிவு முகாமை" தொடர்பான விரிவுரைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இளைஞர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. 

தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி அதிகமான இளைஞர்களின் பங்குபற்றலுடன் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டிகள், மற்றும் நடைபவனி பேரணியும் நடைபெற்றது. இவ் பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு திரேஸ்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி திரு சோமரத்ன , இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக்காரியாலய ஊடக பிரிவிற்கான உதவி பணிப்பாளர் திரு ஜெயதிலக ஆகியோர் கலந்து இளைஞர் தினத்தை வலுவூட்டியிருந்தார்கள். 

கௌரவ அதிதிகளாக வவுனியா சிங்கள பிரதேச செயலக உதவி செயலாளர் திரு ஆனந்தன், வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு ஜெயரட்ணம், வடக்கு மற்றும் வன்னி மாகாணங்களுக்கான கணக்காளர் திரு ஆர்.இரட்ணகுமார், மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகரன் கேசவன், பதிந்து வாசல ஆகியோருடன் பிரதேச, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஆதி இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
வவுனியா.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -