இன்று 2017-05-17ம் திகதி புதன் கிழமை பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் முஸ்லிம்களிடத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை முஸ்லிம்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ள இடர்பாடுகள், முஸ்லிம்களின் இன்றைய தேவைகள், அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு உட்பட முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயற்குழு தெரிவும் எதிர்வரும் நோன்பின் போது இப்தார் நிகழ்வொன்றை நடாத்துதல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவராக முன்னாள் மேல் மாகாண ஆளுநரின் மகனான நகீப் மௌலானா அவர்களும் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களும் தேசிய அமைப்பாளராக அப்துல் சத்தார் அவர்களும் பொருளாளராக இஸ்மாயில் அவர்களும் ஊடக செயலாளராக அஹமட் அசாபு அவர்களும் தொழில்நுட்ப பிரிவுக்கு சஹார்தீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
