களிமண் வீடுகளில் வாழ்ந்து வந்த அக்பர் புறம் மக்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு..!

1990 ம் ஆண்டு காலகட்டத்தில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் தாக்குதலின் காரணமாக 100 பேர் ஷஹீதாக்கப்பட்டு வீடுகள் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டு அரசாங்கத்தினாலும் கைவிடப்பட்டு எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி களிமண் வீடுகளில் வாழ்ந்து வந்த பொலன்னறுவை அக்பர் புறம், பள்ளித்திடல் கிராம மக்களுக்கென ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 50 வீடுகளை கொண்ட புதிய வீடமைப்பு தொகுதியினை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (17) இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு வீட்டுதொகுதியினை பயானாளிகளுக்கு கையளித்தார்.

இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி) பொலன்னறுவை மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் பஸீர், காத்தான்குடி முன்னாள் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், காத்தான்குடி முன்னாள் நகர சபை உறுப்பினர் ரஊப் ஏ மஜீட் உட்பட சமூகப் பிரமுகர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-ஹம்ஸா கலீல்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -