நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கடும் மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மழையுடன் ஏற்பட்ட கடும் காற்றினால் வீடுகளின் கூரைகள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், கிரிபத்கொடை பகுதியில் வெசாக் தோரணையொன்றும் வீழ்ந்துள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இன்று பிற்பகல் முதல் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






